Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs மே..இ. தீவு: புள்ளி விவரம் நமக்கு சாதகம்தான்.. ஆனால் 'கெய்ல் புயல்' தாக்காமல் இருக்கனுமே!

பெர்த்: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் வரும் 6ம்தேதி, வெள்ளிக்கிழமை, பெர்த் மைதானத்தில் மோத உள்ளன. இவ்விரு அணிகளுமே கிரிக்கெட்டில் நீண்ட உறவு கொண்ட அணிகளாகும். கிரிக்கெட் உலக கோப்பை தொடங்கப்பட்ட காலம் முதல் இவ்விரு அணிகளும் விளையாடி வரும் பெருமை பெற்றவை.

நடப்பு உலக கோப்பையில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இவ்விரு அணிகளுக்கு நடுவே இதுவரை நடந்த உலக கோப்பை மோதல்கள் குறித்த ஒரு மீள் பார்வை:

8வது போட்டி

8வது போட்டி

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணி, உலக கோப்பையில் 7 முறை சந்தித்துள்ளன. வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள போட்டி 8வதாகும்.

கபில்தேவ்

கபில்தேவ்

இந்திய அணியில் கபில் தேவ், மேற்கிந்திய தீவுகள் அணியில் தேஸ்மோன்ட் ஹைன்ஸ் ஆகியோர் உலக கோப்பையில் இரு அணிகளும் மோதிய போட்டிகளில் அதிகம் பங்கேற்றுள்ளனர். கடந்த 7 மோதல்களில் 5 போட்டிகளில் இவ்விருவரும் அங்கம் வகித்துள்ளனர்.

முதல் போட்டி

முதல் போட்டி

முதல் முறையாக 1979ம் ஆண்டு உலக கோப்பை தொடரில், இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதின. 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள், இந்தியாவை வீழ்த்தியது.

விவியன் ரிச்சர்ட்ஸ்

விவியன் ரிச்சர்ட்ஸ்

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதலில் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிக ரன்கள் குவித்த வீரராகும். மொத்தம் 197 ரன்கள் அவர் எடுத்தார். அதே அணியை சேர்ந்த மைக்கேல் ஹோல்டிங்தான், 11 விக்கெட்டுகளுடன் பவுலர்களில் முதலிடத்தில் உள்ளார்.

யுவராஜ்சிங் சதம்

யுவராஜ்சிங் சதம்

இந்தியாவுக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ஜோர்டான் கிரீனிட்ஜ் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் தலா ஒரு சதம் அடித்துள்ளனர். இந்திய தரப்பில் 2011 உலக கோப்பையில் யுவராஜ்சிங் 113 ரன்கள் அடித்துள்ளார்.

மொகிந்தர் அமர்நாத்

மொகிந்தர் அமர்நாத்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 4 உலக கோப்பை போட்டிகளில் ஆடி மொகிந்தர் அமர்நாத் மொத்தம் 135 ரன்கள் எடுத்ததே, இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.

ரிச்சர்ட்ஸ் அதிரடி வேஸ்ட்

ரிச்சர்ட்ஸ் அதிரடி வேஸ்ட்

விவியன் ரிச்சர்ட்ஸ் 1983ம் ஆண்டு உலக கோப்பையில் மட்டுமே மொத்தம் 169 ரன்களை இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளின் மூலம் பெற்று சாதித்தார். ஆயினும் அந்த உலக கோப்பையை இந்தியா வென்றது.

முதல் கோப்பை

முதல் கோப்பை

இந்தியா தனது முதலாவது உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை 1983ல் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திதான் பெற்றது.

வெவ்வேறு வீரர்கள்

வெவ்வேறு வீரர்கள்

இதுவரை இந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதிய 7 உலக கோப்பை போட்டிகளிலுமே, வெவ்வேறு வீரர்கள்தான் மேன் ஆப் தி மேட்சை தட்டிச் சென்றுள்ளனர். 1996ல் சச்சின் டெண்டுல்கர், 2011ல் யுவராஜ் சிங் போன்றோர் மேன் ஆப் தி மேட்ச் வாங்கியவர்களில் முக்கியமானவர்கள்.

இந்தியாவின் ஆதிக்கம்

இந்தியாவின் ஆதிக்கம்

இதுவரை மோதிய 7 உலக கோப்பைகளில் 4 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 3 போட்டிகளில் மட்டும் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்றுள்ளது.

Story first published: Tuesday, March 3, 2015, 11:17 [IST]
Other articles published on Mar 3, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+