For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாகிட்ட ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு... பினிஷிங் சரியில்லையேப்பா!

By Veera Kumar

மெல்போர்ன்: இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடியபோதிலும், இறுதி கட்டத்தில் இறங்கும் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆட முற்பட்ட குறைந்த ரன்களில் அவுட் ஆவது தொடர் கதையாகிவருகிறது.

இந்தியா தனது லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை அபாரமாக வென்று அசத்தியுள்ளது. இவ்விரு போட்டிகளிலுமே இந்திய வீரர்களில் தொடக்க ஆட்டக்காரர்களின் பொறுப்பான ஆட்டம்தான் காரணம்.

பாகிஸ்தானை புரட்டிய கோஹ்லி

பாகிஸ்தானை புரட்டிய கோஹ்லி

பாகிஸ்தானுடனான போட்டியில் ஷிகர் தவான்-விராட் கோஹ்லி பார்ட்னர்ஷிப்பும், அதைத் தொடர்ந்து கோஹ்லி-ரெய்னா பார்ட்னர்ஷிப்பும் சிறப்பாக அமைந்தது.

மீண்டும் தவான், கோஹ்லி

மீண்டும் தவான், கோஹ்லி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷிகர்தவான்-கோஹ்லி,, தவான்-ரஹானே பார்ட்னர்ஷிப்புகள் அமர்க்களப்படுத்தின.

பினிஷிங்க்..

பினிஷிங்க்..

ஆனால் இரு போட்டிகளிலுமே அடித்து ஆட வேண்டிய இறுதி கட்டத்தில் சறுக்கி விழுந்ததே இந்திய பேட்ஸ்மேன்கள் வாடிக்கையாக இருந்தது. ஆஸ்திரேலிய பிட்ச்சில் கடைசி நேரத்தில், திடீரென ஒருவர் இறங்கி ஆடிவிட முடியாது என்பதை நம்மவர்கள் காரணமாக கூறினாலும், மற்ற அணிகள் இந்த விஷத்தில் தடுமாறவில்லை என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஓவர்களில் 5 விக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிராக 5 ஓவர்களில் 5 விக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பத்து ஓவர்களில் இந்தியா 83 ரன்களை சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்த ஐந்து விக்கெட்டுகளும், கடைசி ஐந்து ஓவர்களில்தான் வீழ்ந்தன.

தென் ஆப்பிரிக்காவிடமும் அப்படியே

தென் ஆப்பிரிக்காவிடமும் அப்படியே

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் கடைசி பத்து ஓவரில் 80 ரன்களை சேர்த்து 5 விக்கெட்டுகளை பறி கொடுத்தது இந்தியா. அதில் கடைசி 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளும், அதற்கு 40 முதல் 45வது ஓவர்களுக்கு இடையில் 2 விக்கெட்டுகளும் வீழ்ந்தன. இதையெல்லாம் பார்க்கும்போது ஓப்பனிங்கெல்லாம், நல்லாத்தான் இருக்கு.. உங்ககிட்ட பினிஷிங் சரியில்லையேப்பா என்ற வடிவேலு டயலாக்தான் நியாபகம் வருகிறது.

Story first published: Monday, February 23, 2015, 15:08 [IST]
Other articles published on Feb 23, 2015
English summary
India in last 10 overs vs Pak 83/5 and vs it was SA 80/5. This statistics clearly shows India is strugling in lower midile order.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+