Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மே.இ.தீவுகளுக்கு ஈடுகொடுத்து ஜிம்பாப்வே ஆட்டம்... வலுவான அணிகளுக்கு 'வார்னிங்'.... சபாஷ்!

கான்பெரா: மேற்கிந்திய தீவுகள் நிர்ணயித்த 373 ரன்கள் என்ற இமாலய இலக்கில் பாதியையாவது எட்டுமா என்று எகத்தாளமாக நினைக்க வைத்தவர்களுக்கு அணுகுண்டு வெடி வைத்து மிரள வைத்துள்ளது ஜிம்பாப்வே. மேற்கிந்திய தீவுகளின் ஸ்கோரை எட்ட முடியாது போனாலும் 289 ரன்களைக் குவித்து ஆச்சரியமும் மிரட்சியும் அடைய வைத்துள்ளது ஜிம்பாப்வே.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் மேற்கிந்திய தீவுகள் அணியும் ஜிம்பாப்வே அணியும் இன்று மோதின. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு முதல் ஓவரிலே பயங்கர அதிர்ச்சி கொடுத்தது ஜிம்பாப்வே.

முதல் ஓவரின் 2வது பந்தில் ஸ்மித் டக் அவுட்டாக்கப்பட்டார். ஆனால் களத்தில் இருந்த கெய்லுடன் கரம் கோர்த்த சாமுவேல்ஸ் ஜிம்பாப்வே பந்துகளை பின்னி எடுத்துவிட்டனர். அதிலும் கெய்ல் சிக்சர் மழை பொழிந்து இரட்டைச் சதத்தையெல்லாம் கடந்துவிட்டார்.

50 ஓவர் முடிவில் கடைசி பந்தில் 215 ரன்கள் எடுத்த நிலையில்தான் கெய்ல் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 372 ரன்களைக் குவித்தது. மற்றொரு வீரர் சாமுவேல்ஸ் 133 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

சரிந்த விக்கெட்டுகள்

சரிந்த விக்கெட்டுகள்

இதன் பின்னர் ஆட வந்த ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரியத் தொடங்கின. 2வது ஓவரின் 4வது பந்தில் அந்த அணி 11 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்தது. 5 பந்துகளை எதிர்கொண்டு 2 ரன்களே எடுத்திருந்த தொடக்க வீரர் சகப்வா அவுட் ஆனார்.

5 ரன்னில் நடையை கட்டிய மசகஸ்டா

5 ரன்னில் நடையை கட்டிய மசகஸ்டா

அவரைத் தொடர்ந்து 5 வது ஓவரில் மசகஸ்டா 5 ரன்களில் நடையைக் கட்டினார்.

ரசாவும் அவுட்

ரசாவும் அவுட்

பின்னர் 8வது ஓவரில் ஓரளவு நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ரசாவும் 26 ரன்கள் எடுத்த நிலையில் எவுட் ஆனார்.

அசத்திய டெய்லர்- வில்லியம்ஸ்

அசத்திய டெய்லர்- வில்லியம்ஸ்

களத்தில் இருந்த டெய்லர்- சீன் வில்லியம்ஸ் ஜோடி விடா முயற்சியோடு அதிரடி காட்டி ஆடியது. 41 பந்துகளில் அரைசதத்தைக் கடந்த வில்லியம்ஸ் விறுவிறுவென ரன்களைக் குவித்து சதத்தை நோக்கி நடைபோட்டார். ஜிம்பாப்வே அணியின் ஸ்கோரும் கணிசமாக உயர்ந்திருந்தது.

76 ரன்கள் குவித்த வில்லியம்ஸ்

76 ரன்கள் குவித்த வில்லியம்ஸ்

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 28வது ஓவரில் 76 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் வில்லியம்ஸ். இதனால் மேற்கிந்திய தீவு வீரர்கள் நிம்மதி மூச்சுவிட்டனர். அப்போது ஜிம்பாப்வே அணி 28 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்களை எடுத்திருந்தது.

எர்வின் அரைசதம்

எர்வின் அரைசதம்

பின்னர் எர்வின்- மட்சிகென்யேரி ஆகியோர் களத்தில் இருந்தனர். 41 பந்துகளில் அரைசதத்தைக் கடந்த எர்வினை கெய்ல் அவுட் ஆக்கினார். 33.4 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 226 ரன்களை எடுத்தது.

நிலைக்க போராடிய பின்வரிசை வீரர்கள்

நிலைக்க போராடிய பின்வரிசை வீரர்கள்

373 என்பது இமாலய ஸ்கோராக இருந்தாலும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையோடுதான் ஜிம்பாப்வே வீரர்கள் களமாடினர். மட்சிகென்யேரி 23 பந்துகளில் 19 ரன்களை எடுத்தார். சிகும்புரா 20 ரன்களில் 21 ரன்களை எடுத்தார். கடை விக்கெட்டாக வீழ்ந்த சதாரா 20 பந்துகளில் 16 ரன்களை எடுத்தார்.

அசத்திய ஸ்கோர்

அசத்திய ஸ்கோர்

44.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தபோது ஜிம்பாப்வே அணி 283 ரன்களைக் குவித்திருந்தது. 73 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோற்றிருந்தாலும் இந்தியா உட்பட வலுவான அணிகளுக்கு 'நாங்களும் ஆடுவோம்ல' என எச்சரிக்கை கொடுக்கும் வகையில் இருந்தது ஜிம்பாப்வே வீரர்களின் ஆட்டம்!

சபாஷ் ஜிம்பாப்வே...வெல்டன்!!

Story first published: Tuesday, February 24, 2015, 18:12 [IST]
Other articles published on Feb 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+