இங்கிலாந்துக்கு நோ சான்ஸ்.. இந்தியாவுக்கு தான் உலக கோப்பை…! அடித்துச் சொல்லும் மாஸ்டர் பிளாஸ்டர்
மும்பையில் கோடை கால சிறப்பு கிரிக்கெட் அகாடமியில் சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்தார் சச்சின் டெண்டுல்கர். பின்னர் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்திய அணிக்கான வாய்ப்பு,யார் வெற்றி பெற கூடும் என்பது குறித்து விரிவாக பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:இந்த முறை உலக கோப்பை தொடரை இங்கிலாந்து நடத்துகிறது. போட்டியை நடத்தும் இங்கிலாந்துக்கு தான் உலக கோப்பை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். எல்லோரும் இங்கிலாந்து கால சூழலில் வீரர்கள் தங்கள் உடல்நிலையை பொருத்திக் கொள்வது குறித்து பேசி வருகின்றனர்.

திறமையான வீரர்கள்
ஆனால் இந்திய வீரர்களோ பல வருடங்களாக பல்வேறு நாடுகளில் விளையாடி இருக்கின்றனர். அண்மையில் கூட பல நாடுகளில் அவர்கள் திறமையாக விளையாடி இருக்கின்றனர். அதில் சிறப்பாகவும் அவர்கள் செயல்பட்டுள்ளனர். அவற்றை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம்.

வெப்பம் நிலவும்
உலக கோப்பை நடைபெறும் போது இங்கிலாந்தில் கடும் கோடை வெப்பம் நிலவ போகிறது. அதனால் பிட்ச்சுகள் ஸ்விங் பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்காது. பேட்ஸ்மேன்களுக்கு தான் மிகவும் சாதகமாக இருக்கும். கடும் வெப்பத்தில் பிட்சுகள் தட்டையாக மாறி விடும். மேலும் மேக மூட்டம் அதிகமாக இருந்தால், பந்து ஓரளவுதான் ஸ்விங் ஆகும். அதையும் உறுதியாக கூற முடியாது.

சத்தம் வெளிவரும்
கோலி, கே எல் ராகுல், ஹர்திக் போன்ற இந்தியாவின் பலம் வாய்ந்த, திறமையான பேட்ஸ்மேன்கள் அணியில் இருக்கின்றனர். பொதுவாக பேட்டிங் செய்யும் போது பந்து சரியாக பேட்டில் படும்போது ஒரு விதமான சத்தம் வெளிவரும். அந்த சத்தம் தான் அணியில் உள்ள ஒவ்வொரு பேட்ஸ்மேன்களின் நம்பிக்கையாகும்.

இந்தியாவுக்கு தான் கோப்பை
இந்திய அணியில் தற்போது மிகச்சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதனால்.. இந்த முறை உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு தான் அதிக வாய்ப்புகள் இருக்கிறது. உலக கோப்பையை நமது வீரர்கள் இந்தியாவுக்கு எடுத்து வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைத்து வீரர்களும் போதிய ஆட்டங்களில் ஆடியுள்ளனர் என்றார் சச்சின்.


Click it and Unblock the Notifications