Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா vs பாகிஸ்தான்.. எந்த சேனல், ஓடிடியில் பார்க்கலாம்? எத்தனை மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது?

அகமதாபாத்: இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் தொடங்கும் நேரம், எந்த சேனலில் போட்டியை பார்ப்பது, கலைநிகழ்ச்சிகளை எந்த சேனலில் பார்ப்பது, எத்தனை மணிக்கு கலை நிகழ்ச்சிகள் தொடங்குகிறது என்ற அத்தனை விவரங்கள் குறித்தும் பார்க்கலாம்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்.5ஆம் தேதி தொடங்கினாலும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இன்றுதான் உலகக்கோப்பை திருவிழா தொடங்கவுள்ளது. பிசிசிஐ தரப்பில் உலகக்கோப்பை திருவிழாவை கொண்டாடுவதற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. உலகக்கோப்பை தொடருக்கான தொடக்க விழா நடத்தப்படவில்லை என்றாலும், இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு முன் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளது.

World Cup 2023: When and where to watch the India vs Pakistan Match Live Streaming in Television and OTT

அதனை தொடர்ந்து அகமதாபாத் மைதானத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை போட்டி தொடங்கவுள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஆஸ்திரேலியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை வீழ்த்தி அசத்தலான ஃபார்மில் இருக்கிறது. அதேபோல் பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை நெதர்லாந்து மற்றும் இலங்கை அணியை வீழ்த்தி, புதிய வரலாறு படைக்க காத்திருக்கிறது. இதுவரை இந்திய அணியை உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியதே இல்லை.

அதனை மாற்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் போராடவுள்ளனர். இந்த நிலையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி 2 மணிக்கு தொடங்கினாலும் கலைநிகழ்ச்சிகள் 12.30 மணிக்கு தொடங்கிவிடும். இதனால் ரசிகர்கள் மைதானத்திற்குள் காலை 10 மணி முதலே அனுமதிக்கப்படவுள்ளனர். காலை 10 மணி முதலே ரசிகர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே 1.32 லட்சம் இருக்கைகளும் நிரம்பிவிடும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

இந்தப் போட்டிக்கான நேரலை 12.30 மணி முதலே தொடங்கவுள்ளது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பார்க்க முடியும். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் 3 சேனல்கள் மட்டுமல்லாமல் மொழி சார்ந்த தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி என்று அத்தனை சேனல்களிலும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க முடியும். அதேபோல் தூர்தர்ஷன் சேனலில் இலவசமாக ஒளிபரப்பப்படும். இதுமட்டுமல்லாமல் ஓடிடி-யை பொறுத்தவரை டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் இலவசமாக பார்க்கலாம்.

Story first published: Saturday, October 14, 2023, 0:04 [IST]
Other articles published on Oct 14, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+