உலகக் கோப்பை கிரிக்கெட்: சற்று திணறி வென்ற இந்தியா!
பெங்களூரு: உலக கோப்பை கிரிக்கெட் 'பி' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் சற்றுப் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களம் இறங்கிய அயர்லாந்து அணி 47.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக போர்ட்டர் பீல்டு 75 ரன்கள் எடுத்தார். நீல் ஓ பிரையன் 46 ரன்களும், குசக் 24 ரன்களும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் யுவராஜ் சிங் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜாகீர்கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அடுத்து களம் இறங்கிய இந்திய அணி, ஆரம்பத்திலிருந்து நிதானமாக ஆடியது. அயர்லாந்தின் பந்து வீச்சில் ஆரம்பத்தில் சற்று திணறியது.
டெண்டுல்கர் 38 ரன்களை எடுக்க 56 பந்துகளை எதிர்கொண்டார். கோஹ்லி 34 ரன்கள் எடுக்க 53 பந்துகளை சந்திக்க வேண்டியிருந்தது.
யுவராஜ் சிங் ஆட்டம் இழக்காமல் 50 ரன்கள் (75 பந்து, 3 பவுண்டரி) எடுத்தார். கேப்டன் டோனி 34 ரன்கள் (50 பந்து, 2 பவுண்டரி) எடுத்தனர்.
6-வது விக்கெட்டுக்கு யுவராஜ் சிங்குடன் ஜோடி சேர்ந்த யூசுப் பதான் அதிரடியாக சிக்ஸர்களை விளாசினார். அவர் 24 பந்துகளில் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் விளாசி 30 ரன்கள் எடுத்து அணியை வெற்றிபாதைக்கு அழைத்துச் சென்றார்.
முடிவில் 46 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
இதன் மூலம் பி பிரிவில் 5 புள்ளிகள் பெற்றுள்ளது இந்தியா.
கென்யா - கனடா:
இன்றைய ஆட்டத்தில் கென்யாவும் கனடாவும் மோதுகின்றன. டெல்லியில் நடக்கும் இந்த ஆட்டம், பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட்: சிறப்பு பக்கம்

Story first published: Wednesday, December 7, 2011, 18:44 [IST]
Other articles published on Dec 7, 2011

Click it and Unblock the Notifications