Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும், ஒரு வீரர் மீது மட்டும் டோணிக்கு அதிருப்திதானாம்!

பெர்த்: இந்தியா என்னதான் தோல்வியுறாத அணியாக இருந்தாலும், கேப்டன் டோணிக்கு, அணியின் ஒரு வீரர் மீது தொடர்ந்து அதிருப்தி இருந்து வருகிறது.

இந்தியா தனது முதல் மூன்று லீக் போட்டிகளிலும் வென்ற நிலையில், நான்காவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நேற்று பலப் பரிட்சை நடத்தியது. குறைந்த ஸ்கோரை எட்டிப் பிடிப்பதற்குள் இந்திய அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் கேப்டன் டோணியின் பொறுப்பான ஆட்டத்தால், ஆட்டத்தில் வெற்றி பெற்று, இந்தியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

ஒரு வீரர்

ஒரு வீரர்

இந்தியா விளையாடிய அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்றிருந்தாலும், இந்த அனைத்து போட்டிகளிலுமே ஒரு பேட்ஸ்மேன் மட்டும் சோபிக்க தவறி வருவது டோணிக்கு கவலையளிக்கிறது.

நிருபர்களிடம் கொட்டி தீர்த்தார்

நிருபர்களிடம் கொட்டி தீர்த்தார்

நேற்று போட்டி முடிந்த பிறகு தனது மனக்குறையை செய்தியாளர்களிடம் கொட்டி தீர்த்து விட்டார் டோணி.

ஜடேஜாதான் அந்த பேட்ஸ்மேன்

ஜடேஜாதான் அந்த பேட்ஸ்மேன்

ரவீந்திர ஜடேஜா தனது பேட்டிங் திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அணி அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளது. எனவே களத்தில் எப்படி ஜொலிக்கிறோம் என்பதை ஜடேஜா எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம்.

திறமையானவருதான்..

திறமையானவருதான்..

ஜடேஜா திறமையான பேட்ஸ்மேன் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தியாவில் ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டியில் 300 ரன்கள் குவித்த ஜடேஜாவை யாரும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆனால் ஷாட் பிட்ச் பந்தில் அவர் தொடர்ந்து மோசமாக ஆடி வருகிறார். அதுபோன்ற பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஆடிவருகிறார்கள். அதேபோல ஜடேஜா தனக்கான பாணியை கண்டுபிடிக்க வேண்டும்.

ஜடேஜா நீக்கமில்லை

ஜடேஜா நீக்கமில்லை

ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரை அணியில் சேர்க்கும் எண்ணமில்லை. ஏனெனில் 2 ஸ்பின்னர்கள் இருப்பது அணிக்கு பலமாகும். 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினால், ஆட்டத்தில் நேரம் வீணடிக்கப்பட்டு, கேப்டனுக்கு தண்டனை கிடைக்கிறது. எனவே அந்த ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை. இவ்வாறு டோணி கூறினார்.

மோசமான ஃபார்ம்

மோசமான ஃபார்ம்

ஜடேஜா பாகிஸ்தானுக்கு எதிராக 3 ரன்களும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 ரன்களும் எடுத்த நிலையில், நேற்றைய போட்டியில் 13 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். டோணி மறுமுனையில் வெற்றிக்காக போராடிய நிலையில், ஜடேஜா தனது விக்கெட்டை பறிகொடுத்துவிட்டு சென்றார். இறுதியில் அஸ்வின்தான், டோணிக்கு பார்ட்னர்ஷிப் தந்து அணியை மீட்டார். யு.ஏ.இ அணியுடனான போட்டியின்போது ஜடேஜாவுக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 7, 2015, 11:33 [IST]
Other articles published on Mar 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+