Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சூறாவளியும், புயலும், சுனாமியும் இணைந்து தாக்கினால் எப்படி இருக்கும்... இப்படித்தான் இருக்கும்!

கான்பெரா: கான்பெரா மைதானம் இன்று கதிலங்கிப் போய் விட்டது கிறிஸ் கெய்ல் அடித்த அடியில். முதல் ஓவரில் தங்களை ரொம்பவே மிரட்டி விட்ட ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை அடுத்த 49 ஓவர்களிலும் நையப்புடைத்து விட்டனர் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் கெய்லும், சாமுவேல்ஸும்.

ஸமித்தை முதல் ஓவரின் 2வது பந்தில் வீழ்த்திய கையோடு கெய்லுக்கும் குறி வைத்த ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை கெய்ல் சொல்லி வைத்து கில்லி மாதிரி அடித்து நொறுக்கி விட்டார் தனது பேட்டால்.

இன்று கெய்ல் ஆடிய ஆட்டம், ஒரு புயலுக்கு நிகரானதாக இருந்தது. சூறாவளியும், புயலும், சுனாமியும் இணைந்து வந்து தாக்கினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் நிலை குலைந்து போனது ஜிம்பாப்வே பந்து வீச்சு.

40 ஆண்டு காலத்தில் இல்லாத சாதனை

40 ஆண்டு காலத்தில் இல்லாத சாதனை

கடந்த 40- ஆண்டுகளில் படைக்கப்படாத, பார்த்திராத சாதனையை இன்று கெய்ல் படைத்தார். இதுதான் உலகக் கோப்பையில் போடப்பட்ட முதல் இரட்டை சதமாகும்.

138 பந்துகளில்

138 பந்துகளில்

138 பந்துகளில் தனது இரட்டை சதத்தை பூர்த்தி செய்தார் கெய்ல். இது ஒரு உலகக் கோப்பை சாதனையாகும்.

சச்சின் போட்ட இதே நாளில்

சச்சின் போட்ட இதே நாளில்

கடந்த 2010ம் ஆண்டு இதே நாளில்தான் குவாலியரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் இரட்டை சதம் போட்டு சாதனை படைத்திருந்தார். அதே நாளில் கெய்ல், புதிய உலக சாதனை படைத்து விட்டார்.

அதி வேகமான இரட்டை சதம்

அதி வேகமான இரட்டை சதம்

கெய்ல் இன்று போட்டது அதி வேகமான இரட்டை சதமும் கூட. 138 பந்துகளில் இரட்டை சதத்தை அவர் போட்டார். இதற்கு முன்பு 140 பந்துகளில் ஷேவாக் இரட்டை சதம் போட்டதே சாதனையாக இருந்தது.

சதத்திலும் சாதனை

சதத்திலும் சாதனை

கெய்ல் ஒருவர்தான், டுவென்டி 20யில் சதம், ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம், டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த சாதனையை வைத்திருக்கிறார்.

உலகக் கோப்பையில் அதிகபட்சம் இதுதான்

உலகக் கோப்பையில் அதிகபட்சம் இதுதான்

கெய்ல் போட்ட இந்த இரட்டை சதம்தான் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு வீரரின் அதிகபட்ட ரன் குவிப்பாகும்.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இது சாதனை

மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இது சாதனை

அதேபோல ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர் ஒருவர் எடுத்துள்ள அதிகபட்ச ஸ்கோரும் இதுவே.

3வது அதிகபட்ச ஸ்கோர்

3வது அதிகபட்ச ஸ்கோர்

ஒரு நாள் கிரிக்கெட் வரலார்றில் எடுக்கப்பட்ட 3வது உயர்ந்தபட்ச ஸ்கோரும் இதுவேயாகும்.

இந்தியர் அல்லாத முதல் இரட்டை சதம்

இந்தியர் அல்லாத முதல் இரட்டை சதம்

இதுவரை இந்தியர்கள் மட்டுமே ஒரு நாள் போட்டியில் சதம் அடித்துள்ளனர். அதைத் தாண்டி இரட்டை சதம் போட்ட முதல் இந்தியர் அலலாத வீரர் கெய்ல் என்ற புதிய சாதனை இன்று படைக்கப்பட்டது.

5வது முறையாக

5வது முறையாக

ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் போடப்பட்டது இது 5வது முறையாகும். இதற்கு முன்பு ரோஹித் சர்மா 2 முறையும், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர ஷேவாக் தலா ஒரு முறையும் ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் போட்டுள்ளனர்.

அடேங்கப்பா சிக்ஸ் சாதனை

அடேங்கப்பா சிக்ஸ் சாதனை

இந்த போட்டியில் கெய்ல் 16 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில் ரோஹித் சர்மா, டிவில்லியர்ஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

அதிகபட்ச பார்ட்னர்ஷிப்

49.4 ஓவர்களில் 2வது விக்கெட்டுக்கு கெயல் - சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன்களைச் சேர்த்தது. இது ஒரு நாள் கிரிக்கெட்டில் போடப்பட்ட அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகும்.

கடைசி பந்தில் அவுட்

கடைசி பந்தில் அவுட்

இன்றைய போட்டியில் முதல் ஓவரில் ஆரம்பித்து கடைசி ஓவர் வரை நின்று வெளுத்து விட்டார் கெய்ல். கடைசிப் பந்தில்தான் அவர் ஆட்டமிழந்தார்.

Story first published: Tuesday, February 24, 2015, 13:40 [IST]
Other articles published on Feb 24, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+