Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உ.கோப்பை பயிற்சி-பாக்.கை வீழ்த்திய இந்தியா

லண்டன்: டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது.

உலக கோப்பை டுவென்டி-20 தொடர் வரும் 5ம் தேதி இங்கிலாந்தில் துவங்குகிறது. இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தலா இரண்டு பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன. முதல் பயிற்சி போட்டியில் இந்தியா, நியூசிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் இரண்டாவது பயிற்சி போட்டியில் நேற்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் யூனிஸ் கான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார்.

துவக்க வீரராக வந்த ஷாசாயிப், பிரவீண் பந்தில் போல்டானார். அவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. கம்ரன் அக்மல் 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரெய்னாவால் ரன்-அவுட் செய்யப்பட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி அப்ரிதி முதல் பந்திலே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். பாகிஸ்தான் 45 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தவித்தது.

பொறுப்பில்லாமல் பேட் செய்த சோயப் மாலிக் 14 ரன்களுக்கு அவுட்டானார். இந்நிலையில் களமிறங்கிய மிஸ்பா, யூனிஸ் கானுடன் சேரந்து ரன்வேகத்தை அதிகரித்தார். யூனிஸ் 32 ரன்கள் எடு்த்தார். மிஸ்பா 37, யாசர் அராபத் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.

அடுத்து பேட் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கம்பீர், ரோகித் சர்மா வந்தனர். அதிரடியாக விளையாடிய ரோகித் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசினார். அவர் 2 சிக்சர், 9 பவுண்டரி உட்பட 53 பந்தில் 80 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த கம்பீர் 47 பந்தில் 52 ரன்கள், கேப்டன் டோணி 9 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி 17 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

தென் ஆப்ரிக்கா வெற்றி...

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த தென் ஆப்ரிக்கா 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்து வென்றது.

இங்கிலாந்து அபாரம்...

இங்கிலாந்துக்கு எதிரான மற்றொரு பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த இங்கிலாந்து 14.4 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வென்றது. இங்கிலாந்தி சார்பில் துவக்க வீரர் லூக் ரைட் 75, ரவிந்திர போபரா 60 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றஇ தேடி தந்தனர்.

Story first published: Wednesday, December 7, 2011, 18:26 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+