மும்பை: உலக கோப்பை டி20 அரையிறுதியில் இந்திய கிரிக்கெட் அணியை தோற்கடித்த மேற்கிந்திய தீவுகள் வீரர்கள் ரொம்ப ஓவராகத்தான் ஆடுகிறார்கள். ஆனால் இந்த ஆட்டம்தான் அவர்கள் ஸ்பெஷாலிட்டி என்பதால் நாமும் பார்த்து ரசிக்கும்படிதான் உள்ளது.
அரையிறுதி ஆட்டம் முடிந்து ஹோட்டலுக்கு திரும்பிய மேற்கிந்திய தீவுகள் வீரர்களில், கிறிஸ் கெயிலும், ட்வைன் பிராவோவும் சட்டையை கழற்றிவிட்டு மேற்கத்திய இசைக்கு குத்தாட்டம் போட்டனர்.
சாப்பாட்டு பஃபேவில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்களை கரண்டியால் அடித்தும் ஆட்டம் போடுகிறார் பிராவோ. ஹோட்டலில் இருந்து பஸ்சுக்கு நடந்து செல்லும்போது கூட கெட்ட ஆட்டம் போட்டனர் மேற்கிந்திய தீவுகள் வீரர்கள்.
ஆப்கானிஸ்தானுடன் லீக் ஆட்டத்தில் தோற்றபோது கூட மேற்கிந்திய தீவு அணி வீரர் கிறிஸ் கெயில் மைதானத்திற்குள் வந்து ஆப்கன் வீரர்களுடன் ஆட்டம் போட்டார். மேற்கிந்திய தீவுகள் வீரர்களின் ரசனை அப்படியானது என்பதால் நாமும் கண்டுக்காமல் வலிக்காத மாதிரியே இருந்துவிடுவதுதான் நல்லது.