For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவின் "வார்ம் அப் வறுவல்" பட்டியலில்.. மே.இ. தீவுகளும், தென் ஆப்பிரிக்காவும்!

பெங்களூரு: உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில், மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுடன் தலா ஒரு வார்ம் அப் போட்டியில் இந்தியா விளையாடவுள்ளது.

உலகக் கோப்பைத் தொடருக்கு முந்தைய வார்ம் அப் போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதவுள்ளது.

மார்ச் 8ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் உலகக் கோப்பை டுவென்டி 20 போட்டிகள் நடைபெறவுள்ளன.

16 அணிகள்

16 அணிகள்

மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. நாடு முழுவதும் 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

முதலில் வார்ம் அப் போட்டிகள்

முதலில் வார்ம் அப் போட்டிகள்

போட்டித் தொடருக்கு முன்பாக வார்ம் அப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் ஒவ்வொரு அணிக்கும் 2 போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

தர்மசலா - மொஹாலி

தர்மசலா - மொஹாலி

நான்கு மைதானங்களில் வார்ம் அப் போட்டிகள் நடைபெறம். முதல் சுற்றுப் போட்டிகளில் இடம் பெறும் அணிகளுக்கான வார்ம்அப் போட்டிகள் மார்ச் 3 முதல் 6ம் தேதி வரை தர்மசலா மற்றும் மொஹாலியில் நடைபெறும்.

கொல்கத்தா - மும்பை

கொல்கத்தா - மும்பை

அதேபோல 2வது சுற்றில் ஆடும் அணிகளுக்கான வார்ம் அப் போட்டிகள் மார்ச் 10ம் தேதி முதல் 15ம் தேதி கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும்.

இந்தியாவுக்கான போட்டிகள்

இந்தியாவுக்கான போட்டிகள்

இந்தியா மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான வார்ம் அப் போட்டி மார்ச் 10ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும். பின்னர் 12ம் தேதி மும்பையில் தென் ஆப்பிரிக்காவை அது சந்திக்கிறது.

நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி

நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி

இந்தியா நேரடியாக சூப்பர் 10 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் மார்ச் 15ம் தேதி அது நியூசிலாந்தை சந்திக்கவுள்ளது. இந்தியா, 2வது குரூப்பில் இடம் பெற்றுள்ளது. அதில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் முதல் சுற்றில் வெற்றி பெறும் அணி ஆகியவை இடம் பெறும்.

Story first published: Tuesday, February 16, 2016, 13:56 [IST]
Other articles published on Feb 16, 2016
English summary
Former champions India will play 2 warm-up matches at the ICC World Twenty20 2016 tournament, the International Cricket Council (ICC) has announced. World T20, which will be held in India from March 8 to April 3, features 16 teams. Matches will be played across 8 venues.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+