ஃபார்முக்கு வந்த ரோகித் ஷர்மாவால் பவர் பிளேயில் முதல் முறையாக ரன் குவித்த இந்தியா!
மும்பை: ஒருவழியாக அரையிறுதியில் தனது அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் ரன்னை பதிவு செய்தது இந்தியா.
நடப்பு டி20 உலக கோப்பையில் ரோகித் ஷர்மாவும், ஷிகர் தவானும், ஓப்பனிங்கில் இறங்கி வந்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் ஷர்மா 4 ஆட்டத்தில் 45 ரன்களும், ஷிகர் தவான் 4 ஆட்டத்தில் 43 ரன்களும் எடுத்திருந்தனர்.

சூப்பர்-10 சுற்றில் 'பவர்-பிளை'யான முதல் 6 ஓவர்களில் இந்திய அணியின் சராசரி 5.66 ரன் மட்டுமேயாக உள்ளது. காரணம், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களில் சொதப்பல்கள்தான். சூப்பர்-10 சுற்றில் மோசமான ரன்விகிதம் கொண்ட அணி இந்தியா தான்.
இந்நிலையில் இன்று ஷிகர் தவான் நீக்கப்பட்டு அவர் இடத்தில் ரஹானே களமிறக்கப்பட்டார். இன்றைய ஆட்டம் வித்தியாசமாக இருந்தது. அடித்து நொறுக்கிய ரோகித் ஷர்மா 31 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து பத்ரே பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார். இதில் 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் அடங்கும்
முதல் 6 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் எடுத்திருந்தது. இந்த தொடரில் இதுதான் இந்தியாவால் பவர் பிளேயில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாகும். மும்பை மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றபோதிலும், ரஹானே வருகை பாசிட்டிவ் சிக்னலை இந்திய அணிக்கு ஊட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications