Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீசிடம் இந்தியா தோல்வி.. சச்சின் உள்ளுணர்வு சரியாகத்தான் சொல்லியிருக்கு

மும்பை: எனது இதயம் இந்தியா வெற்றி பெறும் என்றுதான் சொல்கிறது, ஆனாலும்.. என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் நேற்று இழுத்தார். அதன் உள் அர்த்தம், வெஸ்ட் இண்டீசிடம் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்று, உலக கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டபோதுதான் டோணி அன்டு கோவுக்கு புரிந்துள்ளது.

உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

இந்திய அணிக்கான உங்களின் மெசேஜ் என்று சச்சின் டெண்டுல்கரிடம் நேற்று, என்டிடி கேள்வி எழுப்பியது. இதற்கு சச்சின் அளித்த பதில் வழக்கத்தைவிட சற்று வித்தியாசமாக இருந்தது.

தோல்வி பயம்

தோல்வி பயம்

சச்சின் கூறியதாவது: வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல், கிரிக்கெட்டை என்ஜாய் செய்து விளையாடுங்கள். நாங்கள் உங்கள் பின்னால் இருக்கிறோம்.

யாரும் ஜெயிக்கலாம்

யாரும் ஜெயிக்கலாம்

எனது இதயம் இந்தியாதான் வெற்றி பெறும் என்று எப்போதுமே சொல்லும். இன்றும் சொல்கிறது. எனது மூளையும் அதையே நம்புகிறது. ஆனால், இன்றைய (நேற்றைய) போட்டியில் யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் என்பதுதான் உண்மை. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் சிறப்பாக ஆடிவருகிறது.

நெருக்கடி

நெருக்கடி

பாகிஸ்தானுக்கு எதிராக மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆடிய இரு போட்டிகளும் சிறப்பானது. இரண்டுமே பிரஷர் போட்டிகள். ஆனால் இந்திய வீரர்கள் அந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வந்தனர்.

சரியான கணிப்பு

சரியான கணிப்பு

எதிணிகளையும், பவுலர்களையும் சரியாக கணிக்க கூடியவர் சச்சின் டெண்டுல்கர். பொதுவாக அவர் கூறும் முன்னெச்சரிக்கைகள் சரியாகவே நடந்து வந்துள்ளன. நேற்றைய போட்டி குறித்து பிரபலங்கள் பலரும் இந்தியா பக்கம் மட்டுமே கருத்து கூறிய நிலையில், சச்சின் மட்டுமே ஆனால்.. என்று இழுத்தார். சச்சின் உள்ளுணர்வு சரியாகத்தான் சொல்லியுள்ளது.

Story first published: Friday, April 1, 2016, 13:11 [IST]
Other articles published on Apr 1, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+