Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை: வார்ம் - அப் போட்டியில் இந்தியா போராடி தோல்வி !

மும்பை: மும்பையில் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியைத் தழுவியது.

டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதிய வார்ம் அப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

World T20: South Africa edge India by 4 runs in warm-up tie

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர்களையும் முழுமையாக விளையாடிய அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

தென் ஆப்பிரிக்க அணியைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு அடிமேல் அடிவாங்கிய கதையாக ரோகித் சர்மா (10), கோஹ்லி (1), ரகனே(11), ரன்களில் விரைவில் பெவிலியன் திரும்பினர். பின்னர் ஜோடி சேர்ந்த தவான் (73), ரெய்னா (41) ரன்கள் சேர்க்க இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. இருவரும் ரிட்டர்யர்டு ஹர்ட் முறையில் திரும்பினர்.

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில் 10 மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி (31), யுவராஜ் (16) அவுட்டாகமல் இருந்தனர்.

Story first published: Sunday, March 13, 2016, 0:18 [IST]
Other articles published on Mar 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+