For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கெயில் அதிரடி சதம்: இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் !

By Karthikeyan

மும்பை: உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் புதன்கிழமை நடைபெற்ற சூப்பர்-10 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் மார்கன் தலைமையிலான இங்கிலாந்து - டேரன் சமி தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் (குரூப் 1) அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது.

world t20: West Indies beat England by six wickets

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேசன் ராய் 15 ரன்கள் எடுத்த நிலையில் ரஸ்ஸல் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹேல்சுடன் ரூட் இணைந்தார். ரூட்டும், ஹேல்சும் இணைந்து அதிரடி காட்டினர். 2 -வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்தனர். 36 பந்துகளில் 48 ரன்கள் எடுத்திருந்த ரூட் ரஸ்ஸல் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மோர்கன் 14 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார்.

இதனால், இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் டுவைன் பிராவோ, ஆன்ட்ரே ரஸ்ஸல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து ஆட்டத்தைத் தொடர்ந்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டி களம் இறங்கியது வெஸ்ட் இண்டீஸ். அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது போல் முதல் ஒவரில் ரன் ஏதும் எடுக்காமல் சார்லஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து கெயில் மற்றும் சாமுவேல்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினர்.

6 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்தது. சீராக ரன்குவிப்பில் ஈடுபட்ட வந்த இந்த ஜோடி 57 ரன்களில் பிரிந்தது. சாமுவேல்ஸ் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதையடுத்து ஆட்டத்தின் போக்கு மாறியது. கெயில் தனக்கே உரிய பாணியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இங்கிலாந்தின் பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்டார் கெயில். அவரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் திணறினர்,

அதிரடியாக விளையாடிய கிரிஸ் கெயில் 47 பந்துகளில் சதம் விளாசினார். அதில் 11 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகளும் அடங்கும். முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவர்களிலே 4 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணி அபார வெற்றி பெற்றது. இந்த சதத்தின் மூலம் டி20 உலக கோப்பை போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார் கெயில்.

அபாரமாக விளையாடி சதம் அடித்த கெயில் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். டி20 உலகக் கோப்பை தொடரில் கெயில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்துள்ளார்.

Story first published: Thursday, March 17, 2016, 0:06 [IST]
Other articles published on Mar 17, 2016
English summary
West Indies beat England by six wickets in World Twenty20
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+