Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விடா முயற்சி, விஸ்வரூப வெற்றி.. கிரிக்கெட் உலகில் திரும்புகிறது மேற்கிந்திய தீவுகள் ஆதிக்கம்

கொல்கத்தா: உலகின் பிற கிரிக்கெட் அணிகளை மிரட்டி வைத்திருந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் பழம் பெருமை மீண்டும் திரும்பிவிட்டது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது, அந்த நாட்டு கிரிக்கெட் அணிகள் தற்போது எடுத்துள்ள விஸ்வரூபத்தை பார்க்கும்போது.

ஜூனியர் உலக கோப்பை என வர்ணிக்கப்படும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் திருவிழா வங்கதேசத்தில் ஜனவரி 22ம் தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் 3 முறை சாம்பியனான இந்தியாவும், மேற்கு இந்திய தீவுகள் அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

பிப்ரவரி 14ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவை வீழ்த்தி மேற்கு இந்திய தீவுகள் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி கோப்பை வென்றது.

மகளிர் அணி

மகளிர் அணி

அதே போல் நேற்று கொல்கத்தாவில் நடந்த மகளிர் உலக கோப்பை டி20 இறுதிப் போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் மகளிர் அணியும். ஆஸ்திரேலிய அணியும் மேதின. 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தைத் முதல் முறையாக தட்டிச் சென்றது மேற்கு இந்திய தீவுகள் மகளிர் அணி.

ஆண்கள் அணி

ஆண்கள் அணி

இதேபோல இங்கிலாந்து - மேற்கு இந்திய தீவுகள் ஆண்கள் அணிகள் நடுவே உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா ஈடன்காடன் மைதானத்தில் தொடங்கியது.

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் 19.4 ஓவரில் 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

புது சாதனை

புது சாதனை

இந்த வெற்றிகளின் மூலம் ஒரே வருடத்தில் நடந்த 3 உலக கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது மேற்கு இந்திய தீவுகள் அணி. எந்த ஒரு நாட்டின் இளையோர், மகளிர் மற்றும் ஆடவர் அணிகள் 3 உலகக் கோப்பைகளை ஒரே வருடத்தில் பெற்றதில்லை.

முதல் கோப்பை மே.இ.தீவுகளுக்குத்தான்

முதல் கோப்பை மே.இ.தீவுகளுக்குத்தான்

1975ம் ஆண்டுதான் முதல் முதலில் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி நடத்தப்பட்டது. 60 ஓவர்கள் கொண்ட முதல் உலக கோப்பையை மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றது. 1979ம் ஆண்டு நடந்த 2வது உலக கோப்பையையும் மேற்கிந்திய தீவுகளே வென்றது.

பிற அணிகளுக்கு நடுக்கம்

பிற அணிகளுக்கு நடுக்கம்

70களில் மேற்கிந்திய தீவுகளை கண்டாலே பிற அணிகளுக்கு நடுக்கம் நிலவியது. பேட்ஸ்மேன்களின் மரண அடி மட்டுமின்றி, அதிவேக பவுன்சர் பந்துகளும் எதிரணியினருக்கு கலக்கம் கொடுத்து வந்த காலகட்டம் அது. இந்நிலையில்தான், 1983ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வென்றது. அப்போதும் இறுதி போட்டிவரை முன்னேறியிருந்தது மேற்கிந்திய தீவுகள் அணி.

தரமான அணி

தரமான அணி

இதன்பிறகு மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை எதையும் வெல்லவில்லை என்றபோதிலும், தரமான ஒரு அணியாகவே தொடர்ந்து வந்தது. காட்ர்னி வால்ஸ், அம்புரோஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், கார்ல் கூப்பர் போன்ற சுழல் பந்து ஆல்-ரவுண்டர்களும், லாரா போன்ற அதிரடி வீரரையும், சந்தர்பால் போன்ற நிலைத்து நின்று ஆடும் வீரரையும் கொண்டிருந்தது அந்த அணி.

சரிந்த அணி

சரிந்த அணி

இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் அரங்கங்களில் சோபிக்க தவறி வந்தது. நிதி பிரச்சினையும் நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது. இதனால் ஐசிசி தரவரிசையில் வங்கதேசம், ஜிம்பாப்வே அணிகளுடன் போட்டி போட்டுக்கொண்டுள்ளது அந்த அணி.

தரவரிசை சரியில்லை

தரவரிசை சரியில்லை

தற்போதுள்ள ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசை பட்டியலில், ஜிம்பாப்வே, வங்கதேசத்துக்கு ஒரு படி மேலே 8வது ரேங்கில் உள்ளது மேற்கு இந்திய தீவுகள் அணி. ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தளவில் வங்கதேசத்துக்கும் கீழே சென்று 9வது இடத்தில் உள்ளது.

டி20யில் சாதனை

டி20யில் சாதனை

அதேநேரம், டி20 கிரிக்கெட்டில் முதலிடத்திலுள்ள இந்தியாவுக்கு அடுத்தபடியாக 2வது ரேங்கிலுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி. இப்போதுள்ள பேட்டிங் லைனை வைத்து பார்க்கும்போது மேற்கிந்திய தீவுகள் அணி டி20 கிரிக்கெட்டில் மட்டுமே சாதிக்க கூடியதாக உள்ளது.

50 ஓவர்களிலும் முன்னேற்றம்

50 ஓவர்களிலும் முன்னேற்றம்

ஆனால், ஜூனியர் உலக கோப்பை 50 ஓவர்கள் கொண்ட போட்டி என்பதும், ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் இந்திய ஜூனியர் அணியை மேற்கிந்திய தீவுகள் தோற்கடித்து உலக கோப்பையை வென்றது என்பதையும் மறுக்க முடியாது.

அடுத்த தலைமுறை

அடுத்த தலைமுறை

மேற்கிந்திய தீவுகளின் அடுத்த தலைமுறை டி20யில் மட்டுமல்ல, ஒன்டே போட்டிகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்பதை காட்டிவிட்டது. இந்த அணியி்ல் இருந்து சீனியர் அணிக்குள் வீரர் சேர்ப்பு படலம் நடக்கலாம். அப்போது மேற்கிந்திய தீவுகள் அனைத்து வகை போட்டிகளிலும் தனது முத்திரையை பதிக்க முடியும்.

வரலாறு திரும்புகிறது

வரலாறு திரும்புகிறது

மேற்கிந்திய தீவுகள் அணி நிர்வாகம் பொருளாதார ரீதியாக முன்னேறும்பட்சத்தில், மீண்டும் 1970களின் வசந்த வரலாறு மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. இதைத்தான் கரீபியன் ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

Story first published: Monday, April 4, 2016, 11:54 [IST]
Other articles published on Apr 4, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+