Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC Points Table - இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு.. இங்கிலாந்து அதிரடி முன்னேற்றம்.. பைனல் ரேஸ்

மான்செஸ்டர்: 2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் இங்கிலாந்து அதிரடியாக ஏழாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம், முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அந்த அணி ஆயத்தமாகி இருக்கிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். தற்போது முதல் இடத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உள்ளன. மூன்றாவது இடத்தில் நியூசிலாந்து அணியும், நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளன.

WTC England india england vs sri lanka


தற்போது இந்தப் புள்ளி பட்டியலில் இந்தியா 68.52 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 62.5 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 50 சதவீதம், இங்கிலாந்து 41.07 சதவீதங்களுடன் அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. இங்கிலாந்து அணியிடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை ஐந்தாவது இடத்தில் 40 சதவீத வெற்றியுடன் உள்ளது.

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆன டெஸ்ட் தொடர் இந்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெறப் போகும் அணிகளை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை தவிர்த்து வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராகவும் இந்திய அணி விளையாட உள்ளது.

ENG vs SL: மாபெரும் டெஸ்ட் சாதனை படைத்த ஜாம்பவான்.. இங்கிலாந்து அபார வெற்றி.. இலங்கை தோல்வி


2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இன்னும் பத்து போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதில் குறைந்தபட்சம் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்திய அணி முதல் இரண்டு இடங்களில் இடம்பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை இன்னும் எட்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. அந்தப் போட்டிகள் அனைத்திலும் இங்கிலாந்து வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலவீனமாக இருப்பதால் இங்கிலாந்து அந்த அணிகளை வீழ்த்தும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

2023 - 25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியல் - (இங்கிலாந்து - இலங்கை முதல் டெஸ்ட் போட்டிக்கு பின்)

1. இந்தியா - 68.52

2. ஆஸ்திரேலியா - 62.50

3. நியூசிலாந்து - 50.00

4. இங்கிலாந்து - 41.07

5. இலங்கை - 40.00

6. தென்னாப்பிரிக்கா - 38.89

7. பாகிஸ்தான் - 36.66

8. வங்கதேசம் - 25.00

9. வெஸ்ட் இண்டீஸ் - 18.52

Story first published: Sunday, August 25, 2024, 9:27 [IST]
Other articles published on Aug 25, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+