Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் பட்டியல்.. ரோஹித் எந்த இடம்?

மும்பை: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை அதிக வெற்றிகளை குவித்த கேப்டன்கள் வரிசையில் ரோஹித் சர்மா நான்காவது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி அடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அதன் முடிவில் இந்திய அணி நான்கு வெற்றிகளை பெற்றாலும் ரோஹித் சர்மா இந்த பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் கேப்டன் பதவியில் இல்லாத விராட் கோலி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக வெற்றிகளை குவித்த முதல் ஏழு கேப்டன்கள் யார்? என்று பார்ப்போம். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த 2018 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். அவர் 28 போட்டிகளில் 17 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார். அடுத்து அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

ind vs ban india rohit sharma

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் இருக்கிறார். அவர் 24 போட்டிகளில் 15 வெற்றிகளை இங்கிலாந்து அணிக்கு பெற்றுக் கொடுத்து இருக்கிறார். இவர் "பேஸ்பால்" (Bazball) எனப்படும் அதிரடி ஆட்டம் ஆடும் முறையை டெஸ்ட் போட்டிகளில் அறிமுகப்படுத்திய கேப்டன் ஆவார். அதை வைத்தே இத்தனை வெற்றிகளை அவர் பெற்று கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் முன்னாள் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார். அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 22 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்தார். அதில் 14 வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார். 2021 ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஒருவேளை அவர் விலகாமல் இருந்திருந்தால் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் ரோஹித் சர்மா இருக்கிறார். அவர் 18 போட்டிகளில் 12 வெற்றிகளை பெற்று கொடுத்து இருக்கிறார். அடுத்து இந்திய அணி எட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் இந்தியா ஆறு வெற்றிகளை பெற்றால் ரோஹித் சர்மா முதலிடத்திற்கு முன்னேறி விடுவார். நான்கு போட்டிகளில் வென்றால் இரண்டாவது இடத்தை பிடிப்பார். எனவே, ரோஹித் சர்மா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக வெற்றிகளை குவித்த கேப்டனாக மாற அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் ஜோ ரூட் இருக்கிறார். இவர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 32 போட்டிகளில் 12 வெற்றிகள் மட்டுமே பெற்றது. ஜோ ரூட் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும், மோசமான கேப்டனாக இருந்துள்ளார்.

இந்த பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் டீன் எல்கர் ஆறாவது இடத்தில் இருக்கிறார். இவர் மிக சில போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக செயல்பட்டார். 16 போட்டிகளில் 8 வெற்றிகளை தென்னாப்பிரிக்காவுக்கு பெற்று கொடுத்து இருக்கிறார். இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் இருக்கிறார். அவர் 18 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்றுக் கொடுத்து இருக்கிறார்.

Story first published: Friday, October 4, 2024, 14:52 [IST]
Other articles published on Oct 4, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+