For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

செய்யறத சிறப்பா செஞ்சாலே போதும்... ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை... ரோகித் பளீர்!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன.

இரு அணிகளுக்கிடையிலான இறுதி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெறுவது குறித்து யோசித்தாலே போதும் என்றும் நடப்பது சிறப்பாக நடக்கும் என்றும் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் தொடர்

டெஸ்ட் தொடர்

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இறுதி இரண்டு போட்டிகள் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 3வது போட்டி வரும் 24ம் தேதி துவங்கவுள்ளது.

இறுதிப்போட்டிக்கு தேவை

இறுதிப்போட்டிக்கு தேவை

இந்த இரு போட்டிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெற முக்கிய தேவையாக உள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதிபெறும். முன்னதாக நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா உறுதி

ரோகித் சர்மா உறுதி

இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி குறித்து அதிகமாக கவலை கொள்ள வேண்டியதில்லை என்றும் தற்போது விளையாடவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுவது குறித்து யோசித்தாலே அது தானாக இந்திய அணிக்கு வசப்படும் என்றும் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மா விளக்கம்

ரோகித் சர்மா விளக்கம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று தெரிவித்துள்ள ரோகித் சர்மா, ஆனால் அதற்கென மேற்கொள்ள வேண்டிய சிறிய சிறிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, February 22, 2021, 11:39 [IST]
Other articles published on Feb 22, 2021
English summary
We will be very happy to qualify for the WTC finals -Rohit Sharma
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+