ஆடவர் IPL-ஐ தட்டி தூக்கிய மகளிர் IPL..அடி எல்லாம் இடி மாதிரி இருக்கு..டெல்லி படைத்த சாதனையை பாருங்க
மும்பை : மகளிர் ஐபிஎல் தொடர் நேற்று கோலாகலமாக தொங்கிய நிலையில், முதல் ஆட்டத்திலேயே மும்பை அணி 207 ரன்கள் குவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது.
இந்த நிலையில், 2வது ஆட்டம் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இதில் நட்சத்திர வீராங்கனைகள் அடங்கிய ஆர்சிபி அணியும், டெல்லி அணியும் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் மகளிர் அணியில் ஆஸ்திரேலிய வீராங்கனை மேக் லென்னிங்கும், அண்டர் 19 கேப்டன் செஃபாலி வர்மாவும் பேட்டிங் செய்ய வந்தனர்.

அதிரடி ஆட்டம்
ஆடவர்களுக்கு சவால் விடும் வகையில், இவ்விரு வீராங்கனைகளின் பேட்டிங்கும் அமைந்திருந்தது. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி பேட்டர்களும்பந்தை மைதானத்தின் நான்கு பக்கமும் சிதறடித்தனர். பவர்பிளேவில் இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்தது.

அடுத்தடுத்து அரைசதம்
இந்திய வீராங்கனை செஃபாலி வர்மா 31 பந்துகளில் அரைதம் அடித்தார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இதே போன்று மேக் லெனிங் 30பந்துகளில் சதம் அடிக்க, இதில் 10 பவுண்டரிகள் அங்கும். ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் எடுத்த வெளிநாட்டு வீரர் என் பெருமையை கில்கிறிஸ்ட் பெற்றார்.

பார்ட்னர்ஷிப்
இதனால் இந்த ஜோடி 58 பந்துகளில் எல்லாம் சதம் அடித்தது. இதன் மூலம் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் 100 ரன்கள் எடுத்த பார்ட்னர்ஷிப் என்ற பெருமையை டெல்லி அணியின் இந்த ஜோடி பெற்றது. ஆடவர் ஐபிஎல்லை பொறுத்தவரை டெல்லி அணியின் ஷிகர் தவானும், கம்பீரும் தான் முதல் முறையாக 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

223 ரன்கள் குவிப்பு
இந்த ஜோடி தொடர்ந்து அதிரடி காட்டி முதல் விககெட்டுக்கு 150 ரனகள் சேர்த்தது. மேக் லென்னிங் 43 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சதம் அடிப்பார் என்ற எதிர்பார்க்கப்பட்ட செஃபாலி வர்மா 45 பந்தில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் 10 பவுண்டரியும், 4 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் தென்னாப்பிரிக்காவின் கெப் 39 ரன்களும், ஜெமிமா 22 ரன்களும் எடுக்க டெல்லி அணி அதிகபட்ச ஸ்கோராக 223 ரன்கள் எடுத்தது.


Click it and Unblock the Notifications