Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் ஐபிஎல்லில் அட்டகாசம்.. கடைசி பந்து வரை பரபரப்பு.. புதிய விதி வைத்து வென்ற உபி.. குஜராத் தோல்வி

மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் அணியும், உத்தரப் பிரதேச அணியும் மோதிய ஆட்டம் ரசிகர்களை சீட்டு நுனிக்கு தள்ளியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக விளையாடி வருகிறது. தொடக்க பேட்டர் மேக்னா 15 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்தார்.

இதே போன்று சோபியா 11 பந்துகளில் 13 ரன்கள் சேர்த்தார். அன்னாபெல் சத்தர்லேண்ட் 8 ரன்களிலும், சுஸ்மா வெர்மா 9 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

169 ரன்கள்

169 ரன்கள்

எனினும் ஹார்லின் டியோல் நடுவரிசையில் அபாரமாக விளையாடி 32 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். இறுதியில் அஸ்லெக் கார்ட்னர் 25 ரன்களிலும், தயலான் ஹேமலதா 21 ரன்களிலும் சேர்க்க குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

உத்தரபிரதேச வீராங்கனை தீப்தி சர்மா , சோபி எசெல்ஸ்டோன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதே போன்று உத்தரப் பிரதேச அணியின் தொடக்க வீராங்கனைகள் அலிசா ஹெலி 7 ரன்களிலும், ஸ்வேதா 5 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

தஹிலா மெக்ராத் டக் அவுட்டாக, தீப்தி சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கிரண் மற்றும் கிரேஸ் ஹாரிஸ் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் குஜராத் வீராங்கனைகள் தடுமாறினர்.

கடைசி ஓவர் திரில்லர்

கடைசி ஓவர் திரில்லர்

கடைசி ஓவரில் உபி அணியின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் ஹாரிஸ் சிக்சர் அடித்தார். 2வது பந்து வெயிடாக மாற, மறு பந்தில் வீராங்கனைகள் டபுள்ஸ் ஓடினர். ஆட்டத்தின் 4வது பந்தில் நடுவர் ஓயிடு தர மறுக்க, புதிய விதியை பயன்படுத்தி உபி வீராங்கனைகள் டிஆர்எஸ் கேட்க, அது ஓயிடு என்று உறுதியானது இதனையடுத்து 4வது பந்தில் பவுண்டரியும், கடைசி பந்தில் சிக்சரும் விளாசிய கிரேஸ் உபி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். ஹாரிஸ், எசில்டன் ஜோடி 26 பந்துகளில் 70 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வித்திட்டனர்.

Story first published: Monday, March 6, 2023, 10:59 [IST]
Other articles published on Mar 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+