Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சகலை.. நமக்கு முன்னாடியே கோப்பையை வாங்கிடுவாங்க போலையே? ஆர்சிபி அணியை கலாய்க்கும் மீம்ஸ்

மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை டெல்லி, பஞ்சாப் ஆர் சி பி போன்ற அணிகள் இதுவரை ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. இந்த மூன்று அணிகளில் ஆர்சிபிக்கு தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் நட்சத்திர வீரருமான விராட் கோலி முதல் சீசனில் இருந்து ஆர்சிபி அணிக்கு தான் விளையாடுகிறார்.

இந்த முறை வாங்கிவிடும், அடுத்த முறை வாங்கி விடும் என ரசிகர்கள் சுமார் 16 ஆண்டுகளாக காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கோப்பையை வெல்லவில்லை என்றாலும் ஆர் சி பி ரசிகர்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் மற்ற அணி ரசிகர்களை கிண்டல் செய்வார்கள்.

WPL 2024 - Meme which trolls RCB mens team by comparing supreme performance of womens team

இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் சென்ற ஆண்டு ஆர்சிபி அணி சொதப்பினாலும் நடப்பாண்டு அபாரமாக விளையாடுகிறது. இதுவரை மூன்று போட்டிகள் விளையாடி இரண்டு போட்டியில் வெற்றி, ஒரு தோல்வி என 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

ஆர் சி பி அணியின் பேட்டிங் பந்துவீச்சு என இரண்டுமே சிறப்பாக இருக்கிறது. இதனால் இம்முறை ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர் சி பி அணி தான் சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனை வைத்து தான் தற்போது ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். ஆர் சி பி யின் ஆண்கள் அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை.

தாங்கள் முதல் கோப்பையை வெல்ல வேண்டும் என போராடி வரும் நிலையில் ஆண்கள் அணியை மிஞ்சி பெண்கள் அணி முதல் முறையாக கோப்பையை வென்று விடும் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகிறார்கள்.இதனை வைத்து லிவிங்ஸ்டன், வடிவேலு ஆகியோர் கோவை சரளா குஷ்புவை பார்த்து சகலை, இவங்க வேலைக்கு போய் சம்பாதித்தால் நமக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என்று பேசும் டெம்ப்ளட்டை வைத்து சகல இவங்க கோப்பையை முதலில் வென்று விட்டால் நமக்கு மரியாதை இல்லாமல் போய்விடும் என்று ரசிகர்கள் ஆர் சி பி அணியை கிண்டல் செய்து வருகிறார்கள்.

Story first published: Friday, March 1, 2024, 18:31 [IST]
Other articles published on Mar 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+