For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பை இந்தியன்ஸ்-ஐ துவம்சம் செய்த ஆர்சிபி.. இப்படி நடக்கும்னு கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க

பெங்களூர் : 2024 மகளிர் ஐபிஎல் தொடரின் புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. முதல் மகளிர் ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றிலும் ஆதிக்கம் செலுத்தி இருந்தது.

2024 மகளிர் ஐபிஎல் தொடரிலும் தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்தது மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி. ஆனால், அதற்கு இணையாக இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகளை பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அதிக நெட் ரன் ரேட் அடிப்படையில் முதல் இடத்தை மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து தட்டிப் பறித்து இருக்கிறது.

 WPL 2024 Points Table : Royal Challengers Bangalore beat Mumbai Indians in points table

கடந்த சீசனில் தொடர்ந்து ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை தான் ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்து இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடும் போட்டியாக மாறி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி.

குஜராத் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் 12.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கான 108 ரன்களை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவு செய்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அந்த வெற்றியின் மூலம் 2 புள்ளிகள் கிடைத்ததோடு நெட் ரன் ரேட் அதிரடியாக உயர்ந்தது. தற்போது அந்த அணியின் நெட் ரன் ரேட் 1.665 ஆக உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியும் 4 புள்ளிகள் பெற்று இருந்தாலும் 0.488 என்ற அளவில் தான் அந்த அணியின் நெட் ரன் ரேட் உள்ளது. அதனால் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டும் பெற்று 2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் இரண்டு போட்டிகளில் இரண்டு தோல்விகள் பெற்று நெட் ரன் ரேட் அடிப்படையில் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.

2024 மகளிர் ஐபிஎல் புள்ளிப் பட்டியல் :

1. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 4 புள்ளிகள் - 1.665 நெட் ரன் ரேட்

2. மும்பை இந்தியன்ஸ் - 4 புள்ளிகள் - 0.488 நெட் ரன் ரேட்

3. டெல்லி கேபிடல்ஸ் - 2 புள்ளிகள் - 1.222 நெட் ரன் ரேட்

யுபி வாரியர்ஸ் - 0 புள்ளிகள் - -1.266 நெட் ரன் ரேட்

குஜராத் ஜெயன்ட்ஸ் - 0 புள்ளிகள் - -1.968 நெட் ரன் ரேட்

Story first published: Wednesday, February 28, 2024, 10:11 [IST]
Other articles published on Feb 28, 2024
English summary
WPL 2024 Points Table : Royal Challengers Bangalore beat Mumbai Indians in points table
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+