For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WPL 2026 துவக்க விழா எத்தனை மணிக்கு துவங்கும்? மும்பை இந்தியன்ஸ் - ஆர்சிபி போட்டி எப்போது?

மும்பை: கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த மகளிர் ஐபிஎல் 2026 கிரிக்கெட்த் தொடரின் 4-வது சீசன் இன்று (வெள்ளிக்கிழமை, ஜனவரி 9) கோலாகலமாகத் தொடங்குகிறது. கிரிக்கெட் மட்டுமின்றி பாலிவுட் நட்சத்திரங்களின் கலைநிகழ்ச்சிகளுடனும் இந்தத் திருவிழா அரங்கேறவுள்ளது.

நவி மும்பையில் உள்ள புகழ்பெற்ற டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று மாலை பிரம்மாண்டமான துவக்க விழா நடைபெறவுள்ளது. பிசிசிஐ ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் கிரிக்கெட் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் சங்கமிக்கின்றன.

WPL 2026 first match opening ceremony time Defending Champions Mumbai Face RCB After Grand Opening

நேரம்: துவக்க விழா இன்று மாலை 6:30 மணிக்கு தொடங்கும்.
கலைநிகழ்ச்சிகள்: பாலிவுட் முன்னணி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் பிரபல ராப் இசைப் பாடகர் யோ யோ ஹனி சிங் ஆகியோர் மேடையை அதிர வைக்கவுள்ளனர்.
சிறப்பு விருந்தினர்: முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் அழகி ஹர்னாஸ் சந்து விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்கவுள்ளார்.

முதல் போட்டி: மும்பை vs பெங்களூரு

கலைநிகழ்ச்சிகள் முடிந்தவுடன், சரியாக இரவு 7:30 மணிக்கு முதல் லீக் போட்டி தொடங்கும். இதில் நடப்புச் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (ஹர்மன்பிரீத் கவுர் தலைமை) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஸ்மிருதி மந்தனா தலைமை) ஆகிய அணிகள் மோதுகின்றன.

நேரலை மற்றும் இடங்கள்

எங்கே பார்ப்பது: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ சினிமா (JioCinema) செயலியில் இலவசமாகப் பார்க்கலாம்.

நகரங்கள்: இந்த ஆண்டு போட்டிகள் நவி மும்பை மற்றும் வதோதரா ஆகிய இரண்டு நகரங்களில் நடைபெறவுள்ளன.

இறுதிப்போட்டி: பிப்ரவரி 5-ம் தேதி வதோதராவில் நடைபெறும்.

இந்த சீசனில் சில அணிகளில் கேப்டன் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், யுபி வாரியர்ஸ் (UP Warriorz) அணியை மெக் லானிங் வழிநடத்தவுள்ளார்.

Story first published: Friday, January 9, 2026, 7:55 [IST]
Other articles published on Jan 9, 2026
English summary
WPL 2026 first match, opening ceremony time: Defending Champions Mumbai Face RCB After Grand Opening
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+