WPL 2026 சீசனில் யுபி வாரியர்ஸ் அணி தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. நவி மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்லீன் கவுரின் அபாரமான அரைசதத்தால் தோற்கடித்தது. ஹர்லீன் வெறும் 39 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 64 ரன்கள் விளாசி, 162 ரன்கள் இலக்கைத் துரத்தி வெற்றி பெற உதவினார்.
டெல்லிக்கு எதிரான கடந்த போட்டியில் 46 ரன்களில் "ரிட்டையர்டு அவுட்" செய்யப்பட்ட ஹர்லீன், மிகுந்த உறுதியுடன் விளையாடினார். அவருக்குப் பக்கபலமாக, தென் ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் சோலோ ட்ரயோன் 11 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் குவித்தார். இதன் மூலம் யு.பி. வாரியர்ஸ் 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு இலக்கை எட்டியது.

மும்பை அணிக்கு எதிரான வெற்றிக்குப் பின்னரும், யு.பி. வாரியர்ஸ் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. டெல்லி கேபிடல்ஸ் 2 புள்ளிகள் மற்றும் யு.பி. வாரியர்ஸ் 2 புள்ளிகள் சம புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், டெல்லியின் சிறந்த ரன் ரேட் முன்னிலைக்குக் காரணம்.
மும்பை இந்தியன்ஸ் இரண்டாம் இடத்தில் உள்ளது. நான்கு போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்த போதிலும் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் முன்னணியில் உள்ளன.
WPL 2026 புள்ளிப் பட்டியல் முதலிடம்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2 போட்டிகள், 2 வெற்றி, 0 தோல்வி, 4 புள்ளிகள், NRR +1.974) இரண்டாம் இடம்: மும்பை இந்தியன்ஸ் (4 போட்டிகள், 2 வெற்றி, 2 தோல்வி, 4 புள்ளிகள், NRR +0.469) மூன்றாம் இடம்: குஜராத் ஜெயண்ட்ஸ் (3 போட்டிகள், 2 வெற்றி, 1 தோல்வி, 4 புள்ளிகள், NRR +0.105) நான்காம் இடம்: டெல்லி கேபிடல்ஸ் (3 போட்டிகள், 1 வெற்றி, 2 தோல்வி, 2 புள்ளிகள், NRR -0.833) ஐந்தாம் இடம்: யு.பி. வாரியர்ஸ் (4 போட்டிகள், 1 வெற்றி, 3 தோல்விகள், 2 புள்ளிகள், NRR -0.906)
ஆரஞ்சு தொப்பிக்கான பந்தயத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். நேற்று 11 பந்துகளில் 16 ரன்கள் அடித்த அவர், 181 ரன்களுடன் முதல் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.
அதிக ரன் பட்டியலில் போபி லிச்ஃபீல்ட் (யு.பி. வாரியர்ஸ்), மும்பைக்கு எதிராக 25 ரன்கள் குவித்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். மும்பை இந்தியன்ஸின் நாட் ஸ்கைவர்-ப்ரன்ட், 43 பந்துகளில் 65 ரன்கள் விளாசி ஐந்தாம் இடத்தில் உள்ளார். WPL வரலாற்றில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீராங்கனையான இவர், இந்த சீசனிலும் 139 ரன்கள் சேர்த்துள்ளார்.
WPL 2026 அதிக ரன்கள் (ஆரஞ்சு தொப்பி): 1. ஹர்மன்பிரீத் கவுர் (மும்பை இந்தியன்ஸ்): 4 போட்டிகள், 181 ரன்கள், சிறந்த ஸ்கோர் 74* 2. லிசெல் லீ (டெல்லி கேபிடல்ஸ்): 3 போட்டிகள், 163 ரன்கள், சிறந்த ஸ்கோர் 86 3. போபி லிச்ஃபீல்ட் (யு.பி. வாரியர்ஸ்): 4 போட்டிகள், 150 ரன்கள், சிறந்த ஸ்கோர் 78 4. சோபி டிவைன் (குஜராத் ஜெயண்ட்ஸ்): 3 போட்டிகள், 141 ரன்கள், சிறந்த ஸ்கோர் 95 5. நாட் ஸ்கைவர்-ப்ரன்ட் (மும்பை இந்தியன்ஸ்): 3 போட்டிகள், 139 ரன்கள், சிறந்த ஸ்கோர் 70
அதிக விக்கெட்டுக்கான பர்பிள் தொப்பிக்கான பட்டியலில் மும்பை இந்தியன்ஸின் அமெலியா கெர், நேற்று நடந்த போட்டியில் லிச்ஃபீல்ட் விக்கெட் மட்டுமே வீழ்த்தி, நான்கு ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்தார். இருப்பினும், அவர் WPL 2026ல் ஏழு விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் நந்தினி ஷர்மா மூன்று போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். கெர் அவரை விட ஒரு விக்கெட் பின்தங்கியுள்ளார். மும்மை இந்தியன்ஸின் நாட் ஸ்கைவர்-ப்ரன்ட், இரண்டு விக்கெட்டுகளை எடுத்ததன் மூலம் தனது எண்ணிக்கையை ஐந்து ஆக உயர்த்தி, சோபி டிவைனின் சாதனையுடன் சமன் செய்தார்.