For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WPL 2026 ஏலம் - 5 மகளிர் ஐபிஎல் அணிகளின் முழு பட்டியல்.. ரூ.40.8 கோடிக்கு வாங்கப்பட்ட வீராங்கனைகள்

டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் சீசனுக்கான மெகா ஏலம் புதுடெல்லியில் நடந்து முடிந்தது. மொத்தம் 5 அணிகளும் சேர்ந்து சுமார் ₹40.8 கோடியைச் செலவிட்டு 67 வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்துள்ளன. இதில் 23 வெளிநாட்டு வீராங்கனைகளும் அடக்கம். இந்த ஏலத்தின் முடிவில் ஐந்து மகளிர் ஐபிஎல் அணிகள் பட்டியல் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்த ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு ஏலம் போனவர் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா ஆவார். அவரை உபி வாரியர்ஸ் அணி 'RTM' ('Right to Match') கார்டு பயன்படுத்தி ₹3.2 கோடிக்கு வாங்கியது. இதன் மூலம் ஸ்மிருதி மந்தனாவுக்கு (₹3.4 கோடி) அடுத்தபடியாக அதிக சம்பளம் பெறும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை தீப்தி சர்மா பெற்றுள்ளார். அதேபோல மூத்த வீராங்கனை ஷிகா பாண்டே ₹2.4 கோடிக்கு ஏலம் போனது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

WPL Auction 2026 all 5 teams players list with price including retained players

ஏலத்திற்குப் பிந்தைய 5 அணிகளின் முழுமையான அணி விவரம் மற்றும் செலவு விவரங்கள் இங்கே:

1. மும்பை இந்தியன்ஸ்

மும்பை அணி தனது பழைய நட்சத்திரங்களை மீண்டும் வாங்குவதில் குறியாக இருந்தது. குறிப்பாக நியூசிலாந்தின் அமீலியா கெர்ரை ₹3 கோடிக்கு மீண்டும் வாங்கியது. வலுவான வீராங்கனைகளை தக்கவைத்துள்ள மும்பை, சமபலம் வாய்ந்த அணியாகக் காட்சியளிக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் 2026 மகளிர் ஐபிஎல் முழு அணி விவரம்:

நேட் ஸ்கிவர்-பிரண்ட் (₹3.5 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
ஹர்மன்பிரீத் கவுர் (₹2.5 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
ஹெய்லி மேத்யூஸ் (₹1.75 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
அமன்ஜோத் கவுர் (₹1 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
ஜி. கமாலினி (₹50 லட்சம் - தக்கவைக்கப்பட்டவர்)
அமீலியா கெர் (₹3 கோடி)
சஜனா சஜீவன் (₹75 லட்சம்)
ஷப்னிம் இஸ்மாயில் (₹60 லட்சம்)
நிக்கோலா கேரி (₹30 லட்சம்)
சைக்கா இஷாக் (₹30 லட்சம்)
சமஸ்கிருதி குப்தா (₹20 லட்சம்)
திரிவேணி வசிஷ்டா (₹20 லட்சம்)
மில்லி இலிங்வொர்த் (₹10 லட்சம்)
பூனம் கெம்னார் (₹10 லட்சம்)
நல்லா ரெட்டி (₹10 லட்சம்)
ராகிலா ஃபிர்தௌஸ் (₹10 லட்சம்)

2. டெல்லி கேப்பிட்டல்ஸ்

டெல்லி அணி மிகக் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான வீராங்கனைகளைத் தேர்வு செய்தது. லாரா வோல்வார்ட்டை ₹1.1 கோடிக்கு வாங்கியது மிகப்பெரிய லாபமாக அமைந்தது. சினெல்லே ஹென்றி மற்றும் ஸ்ரீ சரணி ஆகியோர் மிடில் ஆர்டரை பலப்படுத்துவார்கள்.

டெல்லி கேப்பிட்டல்ஸ் 2026 மகளிர் ஐபிஎல் முழு அணி விவரம்:

ஜெமிமா ரோட்ரிக்ஸ் (₹2.2 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
ஷஃபாலி வர்மா (₹2.2 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
அனாபெல் சதர்லேண்ட் (₹2.2 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
மரிசான் காப் (₹2.2 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
நிக்கி பிரசாத் (₹50 லட்சம் - தக்கவைக்கப்பட்டவர்)
ஸ்ரீ சரணி (₹1.3 கோடி)
லாரா வோல்வார்ட் (₹1.1 கோடி)
சினெல்லே ஹென்றி (₹1 கோடி)
ஸ்னே ரானா (₹50 லட்சம்)
மின்னு மணி (₹40 லட்சம்)
லிஸெல்லே லீ (₹30 லட்சம்)
தானியா பாட்டியா (₹30 லட்சம்)
நந்தினி சர்மா (₹20 லட்சம்)
தியா யாதவ் (₹10 லட்சம்)
மமதா மடிவாலா (₹10 லட்சம்)
லூசி ஹாமில்டன் (₹10 லட்சம்)

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

ஆர்சிபி அணி பந்துவீச்சு மற்றும் ஆல்-ரவுண்டர் வரிசையில் அதிக கவனம் செலுத்தியது. இங்கிலாந்து பவுலர் லாரன் பெல் (₹90 லட்சம்) மற்றும் பூஜா வஸ்த்ரகர் (₹85 லட்சம்) அணியின் பந்துவீச்சுக்கு வலு சேர்ப்பார்கள். ஏற்கனவே, நான்கு நட்சத்திர வீராங்கனைகள் தக்க வைக்கப்பட்ட நிலையில் ஏலத்தில் மேலும் சிறந்தவர்களை வாங்கி வலுவான அணியை உருவாக்கி உள்ளது ஆர்சிபி அணி.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (2026 மகளிர் ஐபிஎல் முழு அணி விவரம்:

ஸ்மிருதி மந்தனா (₹3.5 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
ரிச்சா கோஷ் (₹2.75 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
எலிஸ் பெரி (₹2 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
ஷ்ரேயங்கா பாட்டீல் (₹60 லட்சம் - தக்கவைக்கப்பட்டவர்)
லாரன் பெல் (₹90 லட்சம்)
பூஜா வஸ்த்ரகர் (₹85 லட்சம்)
அருந்ததி ரெட்டி (₹75 லட்சம்)
கிரேஸ் ஹாரிஸ் (₹75 லட்சம்)
நரைன் டி கிளர்க் (₹65 லட்சம்)
ராதா யாதவ் (₹65 லட்சம்)
ஜார்ஜியா வோல் (₹60 லட்சம்)
லின்சி ஸ்மித் (₹30 லட்சம்)
டி. ஹேமலதா (₹30 லட்சம்)
பிரேமா ராவத் (₹20 லட்சம் - RTM)
கௌதமி நாயக் (₹10 லட்சம்)
பிரத்யூஷா குமார் (₹10 லட்சம்)

4. குஜராத் ஜெயண்ட்ஸ்

குஜராத் அணி சோஃபி டிவைனை ₹2 கோடிக்கு எடுத்து தனது பேட்டிங்கை பலப்படுத்தியுள்ளது. ரேணுகா சிங் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் வரவு பந்துவீச்சை வலுப்படுத்தும்.

குஜராத் ஜெயண்ட்ஸ் 2026 மகளிர் ஐபிஎல் முழு அணி விவரம்:

ஆஷ்லே கார்ட்னர் (₹3.5 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
பெத் மூனி (₹2.5 கோடி - தக்கவைக்கப்பட்டவர்)
சோஃபி டிவைன் (₹2 கோடி)
ஜார்ஜியா வேர்ஹாம் (₹1 கோடி)
பார்தி ஃபுல்மாலி (₹70 லட்சம் - RTM)
காஷ்வி கௌதம் (₹65 லட்சம் - RTM)
ரேணுகா சிங் (₹60 லட்சம்)
டேனியல் வியாட்-ஹார்ஜ் (₹50 லட்சம்)
கிம்பர்லி கார்த் (₹50 லட்சம்)
யாஸ்திகா பாட்டியா (₹50 லட்சம்)
தனுஜா கன்வர் (₹45 லட்சம்)
அனுஷ்கா சர்மா (₹45 லட்சம்)
ராஜேஸ்வரி கெய்க்வாட் (₹40 லட்சம்)
டைடாஸ் சாது (₹30 லட்சம்)
கனிகா அஹுஜா (₹30 லட்சம்)
ஆயுஷி சோனி (₹30 லட்சம்)
ஹேப்பி குமாரி (₹10 லட்சம்)
சிவானி சிங் (₹10 லட்சம்)

5. உபி வாரியர்ஸ்

ஏலத்தின் கிங் மேக்கராக வலம் வந்த உபி வாரியர்ஸ், தீப்தி சர்மா, மெக் லானிங், ஷிகா பாண்டே என நட்சத்திரங்களை அள்ளிக்குவித்தது. ஸ்வேதா செஹ்ராவத்தைத் தவிர்த்து முற்றிலும் புதிய அணியாக உருவெடுத்துள்ளது.

உபி வாரியர்ஸ் 2026 மகளிர் ஐபிஎல் முழு அணி விவரம்:

தீப்தி சர்மா (₹3.2 கோடி - RTM)
ஷிகா பாண்டே (₹2.4 கோடி)
மெக் லானிங் (₹1.9 கோடி)
ஃபீபி லிட்ச்பீல்ட் (₹1.2 கோடி)
ஆஷா சோபனா (₹1.1 கோடி)
சோஃபி எக்லெஸ்டோன் (₹85 லட்சம் - RTM)
டியான்ட்ரா டாட்டின் (₹80 லட்சம்)
கிரண் நவ்கிரே (₹60 லட்சம் - RTM)
ஸ்வேதா செஹ்ராவத் (₹50 லட்சம் - தக்கவைக்கப்பட்டவர்)
ஹர்லீன் தியோல் (₹50 லட்சம்)
கிராந்தி கவுட் (₹50 லட்சம் - RTM)
பிரதிகா ராவல் (₹50 லட்சம்)
குளோயி ட்ரையான் (₹30 லட்சம்)
ஷிப்ரா கிரி (₹10 லட்சம்)
சிம்ரன் ஷேக் (₹10 லட்சம்)
தாரா நோரிஸ் (₹10 லட்சம்)
சுமன் மீனா (₹10 லட்சம்)
ஜி. த்ரிஷா (₹10 லட்சம்)

Story first published: Thursday, November 27, 2025, 22:29 [IST]
Other articles published on Nov 27, 2025
English summary
WPL Auction 2026 all 5 teams players list with price including retained players
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+