Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WPL Auction: மும்பை இந்தியன்ஸ் வீராங்கனைகள் பட்டியல்.. 3 கோடியை அள்ளிய அமீலியா கெர்.. முழு அணி

டெல்லி: 2026 மகளிர் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் புதுடெல்லியில் நடந்து முடிந்துள்ளது. இதில் முன்னாள் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, வாங்கிய வீராங்கனைகளின் பட்டியலையும், முழு அணியையும் இங்கே பார்க்கலாம்.

இந்த ஏலத்தில் தங்களின் பழைய நட்சத்திரமான நியூசிலாந்து வீராங்கனை அமீலியா கெர்ரை மீண்டும் வாங்குவதில் மிகத் தீவிரமாக இருந்தது. கடும் போட்டிக்கு இடையே அவரை ₹3 கோடிக்கு மும்பை அணி வாங்கியது. அவரைத் தவிர, கடந்த சீசன்களில் சிக்ஸர் அடித்து மிரட்டிய கேரளாவைச் சேர்ந்த சஜனா சஜீவனை ₹75 லட்சத்திற்கும், அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயிலை ₹60 லட்சத்திற்கும் அந்த அணி தட்டித் தூக்கியுள்ளது.

Mumbai Indians WPL

ஆஸ்திரேலியாவின் நிக்கோலா கேரி மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சைக்கா இஷாக் ஆகியோரும் மும்பை அணியில் இணைந்துள்ளனர். ஏலத்திற்கு முன்பே மும்பை இந்தியன்ஸ் அணி தனது வலுவான 'கோர்' அணியைத் தக்கவைத்திருந்தது.கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், இங்கிலாந்தின் அதிரடி ஆல்-ரவுண்டர் நேட் ஸ்கிவர்-பிரண்ட் மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஹெய்லி மேத்யூஸ் ஆகியோர் அணியில் தக்கவைக்கப்பட்டனர்.

இவர்களுடன் ஆல்-ரவுண்டர் அமன்ஜோத் கவுர் மற்றும் இளம் வீராங்கனை ஜி. கமாலினி ஆகியோரும் அணியில் தொடர்கின்றனர். தற்போது ஏலத்தின் மூலம் அமீலியா கெர் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் இணைந்திருப்பதால், மும்பை அணி காகிதத்தில் அசைக்க முடியாத பலம் வாய்ந்த அணியாகக் காட்சியளிக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் - வீராங்கனைகள் பட்டியல்

தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகள் & விலை:
நேட் ஸ்கிவர்-பிரண்ட் - ₹3.5 கோடி
ஹர்மன்பிரீத் கவுர் - ₹2.5 கோடி
ஹெய்லி மேத்யூஸ் - ₹1.75 கோடி
அமன்ஜோத் கவுர் - ₹1 கோடி
ஜி. கமாலினி - ₹50 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீராங்கனைகள் & விலை:
அமீலியா கெர் - ₹3.00 கோடி
சஜனா சஜீவன் - ₹75 லட்சம்
ஷப்னிம் இஸ்மாயில் - ₹60 லட்சம்
நிக்கோலா கேரி - ₹30 லட்சம்
சைக்கா இஷாக் - ₹30 லட்சம்
சமஸ்கிருதி குப்தா - ₹20 லட்சம்
திரிவேணி வசிஷ்டா - ₹20 லட்சம்
மில்லி இலிங்வொர்த் - ₹10 லட்சம்
பூனம் கெம்னார் - ₹10 லட்சம்
நல்லா ரெட்டி - ₹10 லட்சம்
ராகிலா ஃபிர்தௌஸ் - ₹10 லட்சம்

Story first published: Thursday, November 27, 2025, 21:34 [IST]
Other articles published on Nov 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+