Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இன்று தொடக்கம்..எந்த சேனல், ஓடிடியில் பார்ப்பது? குஜராத் Vs மும்பை மோதல்

மும்பை : மகளிர் கிரிக்கெட்டின் புதிய அத்தியாயமாக மகளிர் பிரிமியர் லீக் தொடர் இன்று முதல் தொடங்குகிறது.ஆடவர் கிரிக்கெட்டுக்கு நிகராக மகளிர் கிரிக்கெட்டும் அண்மை காலங்களாக வளர்ந்து வருகிறது.

இந்திய மகளிர் அணி விளையாடும் போட்டியை ரசிகர்கள் தற்போது அதிகளவில் பார்த்து வருகின்றனர். பல ஆண்டு கோரிக்கையாக மகளிர் பிரிமியர் லீக் தொடரை பிசிசிஐ அண்மையில் நடத்த முடிவெடுத்தது.

மும்பை, பெங்களூரு, டெல்லி, அகமதாபாத் ,லக்னோ ஆகிய ஐந்து அணிகள் தற்போது முதல் சீசனில் விளையாடுகிறது.

 எப்படி நடைபெறும்?

எப்படி நடைபெறும்?

இன்று தொடங்கும் போட்டி வரும் மார்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 22 போட்டிகள் நடைபெறுகிறது அனைத்தும் மும்பையில் உள்ள டி ஓய் பட்டேல் மைதானத்திலும், பிராபோர்ன் மைதானத்திலும் மட்டுமே நடைபெறுகிறது. இதில் முதல் இடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடம் பிடிக்கும் அணி எலிமினேட்டர் போட்டியில் மோதி அதில் வெற்றி பெறுபவர்கள் அதன் பிறகு இறுதிப் போட்டிக்கும் செல்வார்கள்.

வெளிநாட்டு வீராங்கனைகள்

வெளிநாட்டு வீராங்கனைகள்

ஆடவர் ஐபிஎல் போல் இல்லாமல் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ஒவ்வொரு அணியும் ஐந்து வெளிநாட்டு வீராங்கனைகளை பயன்படுத்தலாம். ஆனால் இதில் ஒரு வெளிநாட்டு வீராங்கனை அசோசியேட் நேசன் என்று அழைக்கப்படும் நாட்டைச் சேர்ந்த வீராங்கனையாக இருக்க வேண்டும்.

இன்றைய முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ஹர்மன் பிரித் கவுர் தலைமையிலான மும்பை அணியும் ஆஸ்திரேலியா வீராங்கனை பெத் மூனி தலைமையிலான குஜராத் ஜெயின்ஸ் அணியும் பல பரிட்சை நடத்துகின்றன.

முக்கிய வீராங்கனைகள்

முக்கிய வீராங்கனைகள்

அஸ்லீக் கார்ட்னர், டாட்டின், சோபியா மற்றும் சினே ரானா போன்ற நட்சத்திர வீராங்கனைகள் இருக்கிறார்கள். மும்பை அணியை பொறுத்தவரை நாட் சிவிர், ஹேலி மேத்யூஸ், அமிலா கேர் போன்ற வீராங்கனைகள் உள்ளனர். இந்த போட்டியை மைதானத்தில் நேரில் காண பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

எங்கு பார்ப்பது?

எங்கு பார்ப்பது?

எனினும் ஆண்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற வேண்டும். மகளிர் பிரீமியர் லீக் தொடரை தொலைக்காட்சியில் ஆங்கிலத்தில் ஸ்போர்ட்ஸ் 18 சேனலிலும் தமிழில் கலர்ஸ் தமிழ் சேனலிலும் கண்டு களிக்கலாம். ஓடிடியை பொறுத்த வரை ஜியோ சினிமாவில் நேரலை செய்யப்படுகிறது.

Story first published: Saturday, March 4, 2023, 10:55 [IST]
Other articles published on Mar 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+