மகளிர் பிரீமியர் லீக்..முதல் ஆட்டமே பட்டாசு.. 207 ரன்கள் குவித்து மும்பை சாதனை..குஜராத் அணி படுதோல்லி
மும்பை : மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதுல் லீக் ஆட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியின் யாஷ்திக் பாட்டியா 1 ரன்னில் வெளியேறினார். மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய வீராங்கனை என்ற பெருமையை கன்வார் பெற்றார்.
இதனையடுத்து ஹேலி மேத்தீவ்ஸ் மற்றும் நாட் சிவியர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

அதிரடி ஆட்டம்
31 பந்துகளை எதிர்கொண்ட ஹேலி மேத்தீவ்ஸ், 4 இமாலய சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகளை அடித்து 47 ரன்கள் குவித்தார். மறுபுறம் நாட் சிவியர் 18 பந்துகளை எதிர்கொண்டு 23 ரன்கள் சேர்த்தார். இதனையடுத்து ஹர்மன்பிரித் கவுர் கேப்டன் இன்னிங்ஸ் ஆடி பட்டையை கிளப்பினார்.

இமாலய இலக்கு
30 பந்துகளை எதிர்கொண்ட ஹர்மன்பிரித் கவுர் 65 ரன்கள் சேர்த்தார். இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் அமிலா கெர் 24 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும். இதே போன்று இறுதியில் பூஜா 15 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் அடங்கும்.

காயம்
இதன் மூலம் மும்பை அணி 207 ஓவர் முடிவில் 5 விக்கெட்டு இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிக்கரமாக அமைந்தது. கேப்டன் பேத் மூனி காயம் காரணமாக ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

சரிந்த விக்கெட்டுகள்
இதே போன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹார்லின் டியோல் டக் அவுட்டாக, ஆஸ்லிக்கார்ட்னர் டக் அவுட் ஆனார். அனாபேல் சதர்லேண்ட் 6 ரன்களில் வெளியேற, ஹேமலதா மட்டும் தனி ஆளாக போராடி 29 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கம் ரன்களில் வெளியேற, குஜராத் அணி 64 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் 143 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications