Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விரித்திமான் சாஹா விவகாரம் - 2 ஆண்டுகள் தடை.. மைதானத்துக்குள் வர கூடாது.. சாட்டையை சுழற்றும் பிசிசிஐ

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் விரித்திமான் சாஹா விவகாரம், இந்த ஆண்டு தொடக்கத்தில் பிசிசிஐக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

Recommended Video

Wriddhiman Saha Case-ல் தொடர்புடைய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுத்த BCCI?

சாஹாவுக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பு கிடையாது. ஓய்வு பெற்றுவிடுங்கள் என்று தேர்வு குழுத் தலைவர் சேத்தன் சர்மாவும், பயிற்சியாளர் டிராவிட்டும் கூறினர் என்றும்,

பிசிசிஐ தலைவராக நான் இருக்கும் வரை, உனக்கு அணியில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று கங்குலி வாக்குறுதி அளித்ததாகவும் சாஹா கூறினார்.

பிசிசிஐ நோட்டீஸ்

பிசிசிஐ நோட்டீஸ்

சாஹாவின் இந்த பேட்டி பிசிசிஐயில் பெரும் புயலை கிளப்பியது. இதனையடுத்து, தேர்வுக்குழு என்ன நினைக்கிறது என்று வீரர்களுக்கு தெரிய வேண்டும் என்பதாலேயே சாஹாவிடம் இதை கூறியதாக பயிற்சியாளர் டிராவிட் கூறினார். இந்த நிலையில், சாஹாவுக்கு விளக்கம் கேட்டு, பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியதாக தகவல் வெளியானது.

சாஹா புகார்

சாஹா புகார்

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து தமக்கு பேட்டி அளிக்குமாறு பத்திரிகையாளர் ஒருவர் தம்மை மிரட்டியதாகவும், பேட்டி அளிக்கவில்லை என்றால் பல எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் குறுஞ்செய்தியில் தெரிவித்ததாக சாஹா, ஸ்கிரின்ஷாட்டுடன் வெளியிட்டார்.

கிரிமினல் நடவடிக்கை

கிரிமினல் நடவடிக்கை

இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பலரும் சாஹாவிடம் அந்த நபர் யார் என்று கேட்டு வற்புறுத்தினர். அந்த பத்திரிகையாளர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சேவாக் உள்ளிட்ட வீரர்கள் தெரிவித்தனர். இது குறித்து பிசிசிஐயும் சாஹாவிடம் புகாரை தனிப்பட்ட முறையில் பெற்று கொண்டது.

பிசிசிஐ விதித்த தடை

பிசிசிஐ விதித்த தடை

இந்தி நிலையில், அது கங்குலியின் நண்பரான பத்திரிகையாளர் போரியா என்று தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு இந்திய கிரிக்கெட் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் இந்தியாவில் உள்ள எந்த மைதானத்திலும் நுழைய 2 ஆண்டுக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ஐசிசி போட்டியிலும் உள்ளே நுழைய அனுமதி வழங்ககூடாது என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுத உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், எந்த கிரிக்கெட் வீரர்களும் போரியாவுடன் தொடர்பில் இருக்க கூடாது என்று பிசிசிஐ உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Story first published: Sunday, April 24, 2022, 21:24 [IST]
Other articles published on Apr 24, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+