அதுதான் அவருக்கு கடைசி ஆட்டம்.. இளம் வீரருக்கு பறந்த மெசேஜ்.. எவ்வளவு கனவுகளோடு வந்தார்.. பாவம்!
சிட்னி: இந்திய அணியின் இளம் வீரர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் போட்டிதான் கடைசி டெஸ்ட் ஆட்டமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மிக மோசமான ஆட்டம் காரணமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது.
முதல் டெஸ்டில் இந்திய வீரர்கள் ஆடிய விதம் பிசிசிஐ அமைப்பை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பல முக்கிய வீரர்களை மொத்தமாக அணியில் இருந்து தூக்கிவிடலாம் என்ற திட்டத்தில் இந்திய அணி உள்ளது.

எப்படி
இந்திய அணியின் இளம் வீரர் ஒருவருக்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடந்த டெஸ்ட் போட்டிதான் கடைசி டெஸ்ட் ஆட்டமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். அந்த வீரர் விர்த்திமான் சாகா. இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருக்கும் இவர் இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்பு இல்லை.

வாய்ப்பு
அதேபோல் இனி நடக்க உள்ள டெஸ்ட் தொடர்களிலும் இவரை தேர்வு செய்ய வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். இவரின் வயது மற்றும் டெஸ்ட் இன்னிங்ஸ் பார்ம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இந்திய அணியின் கீப்பாராக இவர் உள்ளார்.

கீப்பிங்
இந்திய டெஸ்ட் அணியில் கீப்பிங் மற்றும் பேட்டிங் செய்ய கே. எல் ராகுல், பண்ட் போன்ற வீரர்கள் உள்ளனர். சாகா டி 20 போட்டிகளில் நன்றாக ஆடுகிறார், ஐபிஎல் போட்டியிலும் நன்றாக ஆடுகிறார். அதனால் இவருக்கு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு இனி வழங்கப்படாது என்று கூறுகிறார்கள்.

கடைசி ஆட்டம்
கடைசி டெஸ்ட் போட்டிதான் அவருக்கான கடைசி டெஸ்ட் ஆட்டமாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இவர் டெஸ்ட் தொடரில் தன்னை நிரூபிக்கும் ஆசையோடு வந்தார். ஆனால் சரியாக ஆடவில்லை. இவரின் நீக்கம் தொடர்பான தகவல் சில பிசிசிஐ நிர்வாகிகள் மூலம் சாகாவிற்கும் பறந்து உள்ளது. சாகா இதனால் இனி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறித்து.


Click it and Unblock the Notifications