Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காயத்தால் போட்டிகளில் பங்கேற்காத சாஹா... மிகப்பெரிய தலைவலியில் சன்ரைசர்ஸ்!

அபுதாபி : அபுதாபியில் நடைபெறவுள்ள இன்றைய 2வது தகுதிச்சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன.

இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக கடந்த ஆர்சிபி அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் விரித்திமான் சாஹா பங்கேற்கவில்லை.

இந்நிலையில் காயம் ஆறாத நிலையில் இன்றைய போட்டியிலும் அவர் பங்கேற்காத நிலையே காணப்படுகிறது. இதனால் அவருக்கு மாற்று வீரரை களமிறக்குவதில் எஸ்ஆர்எச் மிகப்பெரிய தலைவலியை சந்தித்து வருகிறது.

2வது தகுதிச்சுற்று போட்டி

2வது தகுதிச்சுற்று போட்டி

ஐபிஎல் 2020 தொடரில் சன்ரைசர்ஸ் அணி ஆரம்பத்தில் சொதப்பினாலும் தொடர்ந்து சிறப்பான போட்டிகளை அளித்து பிளே-ஆப்பிற்கு முன்னேறியுள்ளது. மேலும் கடந்த எலிமினேட்டர் சுற்றிலும் ஆர்சிபி அணியை வீழ்த்தி சிறப்பான ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளது. இன்றைய 2வது தகுதிச்சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் அணியை சந்திக்க உள்ளது.

4 போட்டிகள்... 214 ரன்கள்

4 போட்டிகள்... 214 ரன்கள்

அந்த அணியின் சிறப்பான வீரராக விரித்திமான் சாஹா விளையாடி வந்தார். குறிப்பாக பவர் பிளேவில் இவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. சிறப்பான துவக்கத்தை அளித்துவந்த சாஹா 4 போட்டிகளில் மட்டுமே விளையாடி 214 ரன்களை குவித்துள்ளார். இதன் சராசரி 71.33 மற்றும் ஸ்டிரைக் ரேட் 139.86.

போட்டிகளில் பங்கேற்காத சாஹா

போட்டிகளில் பங்கேற்காத சாஹா

இந்நிலையில் இடுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆர்சிபிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் சாஹா விளையாடவிலலை. அந்த போட்டியில் சன்ரைசர்ஸ் சமாளித்து விளையாடி வெற்றி பெற்றுள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் சாஹா விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் அணிக்கு சிக்கல்

சன்ரைசர்ஸ் அணிக்கு சிக்கல்

இந்நிலையில் அவருக்கு மாற்றாக ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை களமிறக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் சிறப்பாக விளையாடாத நிலையில், சரியான மாற்றாக அமையமாட்டார் என்று கருதப்படுகிறது. முதல் போட்டியிலேயே டக்-அவுட் ஆகி வெளியேறினார் கோஸ்வாமி. ஐபிஎல் வெளிநாட்டு வீரர்கள் குறித்த விதிப்படி ஜானி பேர்ஸ்டோவை களமிறக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தவிக்கும் சன்ரைசர்ஸ்

தவிக்கும் சன்ரைசர்ஸ்

இந்நிலையில் சாஹாவிற்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்குவதில் சன்ரைசர்ஸ் மிகப்பெரிய தலைவலியை சந்தித்து வருகிறது. இன்றைய 2வது தகுதிச்சுற்று போட்டி அந்த அணிக்கு வாழ்வா சாவா போட்டி என்பதால், இந்த விவகாரத்தில் சன்ரைசர்ஸ் தவித்து வருகிறது.

Story first published: Sunday, November 8, 2020, 18:18 [IST]
Other articles published on Nov 8, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+