Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC 2025 -பைனலுக்கு செல்லும் வாய்ப்பு இந்தியாவுக்கு பிரகாசம்! முதலிடத்தை கெட்டியாக பிடித்த ரோகித் படை

சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டது. இந்த தொடருக்கு முன்பு இந்திய அணி எஞ்சியிருக்கும் 10 டெஸ்ட் போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்றால் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு மூன்றாவது முறையாக தொடர்ந்து முன்னேற முடியும் என்ற நிலை இருந்தது.

அதற்கு ஏற்றார் போல் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சைக்கிள் புள்ளி பட்டியலில் என்ன மாற்றங்கள் நடந்திருக்கிறது? இந்தியாவின் வெற்றி விகிதம் எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.

ind vs ban india vs bangladesh rohit sharma

இந்த பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 புள்ளி 52 வெற்றி சதவீதத்துடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான அணி 19 புள்ளி பூஜ்ஜியம் ஐந்து சதவீதத்துடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை 38.89 வெற்றி சதவீதத்துடன் ஏழாவது இடத்தில் இருக்கிறது.

வங்கதேச அணி தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதை அடுத்து தற்போது புள்ளி பட்டியலில் சரிந்து இருக்கிறது. 39.29 வெற்றி சதவீதத்துடன் வங்கதேச அணி ஆறாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணி பொறுத்த வரை 42.19 வெற்றி சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இலங்கை அணியை பொறுத்தவரை நாற்பத்தி இரண்டு புள்ளி எட்டு ஆறு வெற்றி சதவீதத்துடன் நான்காவது இடத்திலும், நியூசிலாந்தின் 50 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆஸ்திரேலிய அணி 62.50 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறது.

இந்திய அணி தற்போது வங்கதேசத்துக்கு எதிரான வெற்றியை பெற்றதை அடுத்து 71.67 வெற்றி சதவீதத்துடன் தற்போது முதல் இடத்தில் நீடிக்கிறது. இன்னும் நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 22, 2024, 13:07 [IST]
Other articles published on Sep 22, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+