Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

WTC 2025 புள்ளி பட்டியலில் இந்தியா சரிவு.. இறுதிப் போட்டி வாய்ப்பு அம்பேல்.. இனி ரொம்ப கஷ்டம்!

மும்பை : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிச்சுற்றுக்கு செல்லும் இந்த நிலையில் இந்திய அணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து முதல் இடத்தில் புள்ளி பட்டியலில் இருந்தது. ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் இறுதிப்போட்டி வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துவிடும் என்ற நிலையில் இருந்தது.

இந்த சூழலில் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இந்தியா நீடிக்கும் என்ற சூழலில் இருந்தது.

ind vs nz wtc 2025 rohit sharma virat kohli

இந்த தருணத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ந்து தோல்வியை தழுவி ஒயிட்வாஷ் ஆகி இருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதன் மூலம் முதன்முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி சரிவை சந்தித்து இருக்கிறது.

தற்போது ஆஸ்திரேலியா அணி 62.50 வெற்றி சதவீதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது. இந்திய அணி தொடர்ந்து மூன்று டெஸ்ட்களில் தோல்வியை தழுவியதால் 58.33 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இலங்கை அணி 55.56 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 54.55 வெற்றி செலவுகள் நான்காம் இடத்தில் இருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணி 54.17 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முறையே ஆறு ,ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய இடங்களில் இருக்கிறது. இந்த நான்கு அணிகளும் இனி பைனலுக்கு செல்ல முடியாது.

இன்னும் இந்திய அணிக்கு ஐந்து டெஸ்ட் போட்டிகள் எங்கே இருக்கிறது? இதில் நான்கில் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும். அது முடியாத காரியம் என்பதால் இந்திய அணி இம்முறை பைனலுக்கு செல்ல போவதில்லை.

Story first published: Sunday, November 3, 2024, 13:37 [IST]
Other articles published on Nov 3, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+