For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC- டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. கொஞ்சநஞ்ச கவுரவத்தையும் இழந்த பாகிஸ்தான்.. கடைசி இடம் மட்டுமே!

முல்தான்: 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்தை மட்டுமே பிடித்து இருக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியில் வென்று, மற்றொரு போட்டியில் தோல்வி அடைந்தது.

இதை அடுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றி சதவீதம் 27.98 என்பதாக சரிந்தது. ஒன்பது அணிகள் பங்கேற்று உள்ள 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் பாகிஸ்தான் அணி கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 28.21 என்ற வெற்றி சதவீதத்துடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

WTC 2025 Points Table Pakistan finished in last place after losing against West Indies

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி பல தோல்விகளை சந்தித்து வந்தது. இடையே இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று இருந்தது. அதே போல, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் வெற்றி பெற்று ஏழாவது இடத்தை பெற்று கவுரவத்தை காப்பாற்றலாம் என நினைத்த பாகிஸ்தான் அணிக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 120 ரன்கள் வித்தியாசத்தில் வென்று அதிர்ச்சி அளித்தது வெஸ்ட் இண்டீஸ்.

இந்த புள்ளிப் பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த இரண்டு அணிகளும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று தொடர்களில் இன்னும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மட்டுமே மீதம் உள்ளது.

அந்த தொடரின் முடிவு எப்படி இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது உறுதியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தியா 50 சதவீத வெற்றியுடன் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறது. நியூசிலாந்து நான்காவது இடத்திலும், இலங்கை ஐந்தாவது இடத்திலும், இங்கிலாந்து ஆறாவது இடத்திலும், வங்கதேசம் ஏழாவது இடத்திலும் உள்ளன.

பாகிஸ்தான் அணி கடைசி இடமான ஒன்பதாம் இடத்திற்கு செல்ல முக்கிய காரணம், அந்த அணி ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் பாகிஸ்தான் அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.

அடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலும் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பதிவு செய்தது பாகிஸ்தான். இதன் தான் ஆடிய 14 போட்டிகளில் ஐந்து வெற்றிகள் மற்றும் ஒன்பது தோல்விகளை பதிவு செய்த பாகிஸ்தான் அணி, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து இருக்கிறது.

Story first published: Monday, January 27, 2025, 17:20 [IST]
Other articles published on Jan 27, 2025
English summary
WTC 2025 Points Table: Pakistan finished in last place after losing against West Indies.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+