Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக டெஸ்ட் பைனல் - முதல் நாளில் தடுமாறிய இந்தியா.. ஆதிக்கம் செலுத்திய ஆஸி..327 ரன்களுக்கு 3 விக்கெட்

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. வானத்தையும், பூமியையும் பார்த்து, பந்துவீச்சுக்கு சாதகமாக தான் ஆடுகளம் இருக்கிறது என்று நினைத்து ரோகித் சர்மா ஏமாந்து போனார்.

டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணிக்கு முதல் அரைமணி நேரம் மட்டும் தான் சாதகமாக இருந்தது. அதன் பிறகு முற்றிலும், ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருந்தது. சொல்லப்போனால், இந்தியாவால் மீண்டும் ஆட்டத்திற்குள் வரவே முடியவில்லை.

WTC Final 2023 - Australia in strong position at the end of day 1 vs india

எப்படி பள்ளியல் ஏதேனும் ஒரு மாணவன் தவறு செய்தால், ஒட்டுமொத்த வகுப்பு மாணவர்களும், கிரவுண்டில் வெயிலில் நிற்பார்களோ, அதே போல் ரோகித் சர்மா செய்த தவறால், ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களும் வெயிலில் நின்று ஆஸ்திரேலிய வீரர்கள் கொடுத்த தண்டனையை வாங்கி இருப்பார்கள்.

இதில் ஒரு நல்ல விசயம் என்றால், சென்னை, வெயிலில் விளையாடிய வீரர்களுக்கு லண்டன் வெயில் ஒன்றும் செய்திருக்காது. ஆனால், விக்கெட்டே எடுக்க முடியாமல், ஆஸ்திரேலிய வீரர்களின் பேட்டிங்கை பார்த்த இந்திய வீரர்களுக்கு மனதளவில் சோர்வு அடைந்திருப்பார்கள். உஸ்மான் கவாஜா டக் அவுட்டாக, 2 ரன்னில் முதல் விக்கெட்டை ஆஸ்திரேலியா இழந்தது. மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து , அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனையடுத்து இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

76 ரன்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்த நிலையில், களத்துக்கு வந்த ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார். ஸ்மித்தும் 227 பந்துகள் எதிர்கொண்டு 95 ரன்கள் எடுத்து, சதத்தை நெருங்குகிறார். ஸ்மித், டிராவிஸ் ஹெட் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 251 ரன்கள் சேர்த்து களத்தில் உள்ளனர்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுக்கு இழப்பற்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 95 ரன்கள், டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தங்களுடைய யுத்திகளை மாற்றி செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டும். இல்லையேனில், ஆஸ்திரேலியா அந்த செங்ககோல் வடிவிலான கோப்பையை வென்று விடுவார்கள்.

முதல் நாளில் ஷமி 20 ஓவர், சிராஜ் 19 ஓவர், உமேஷ் யாதவ், ஜடேஜா தலா 14 ஓவர், ஷர்துல் 18 ஓவர் என அனைவரின் உடலும் இன்று பெண்டு கழன்று இருக்கும். இதனால் நாளைய ஆட்டத்தில் எப்படி பவுலர்கள் உடல் புத்துணர்ச்சியுடன் விளையாடுவார்கள் என்பதும் சந்தேகமே. ஆஸ்திரேலியா விளையாடியது போல், இந்தியாவும் அதிரடியாக விளையாடி, அவர்கள் அடிக்கும் ஸ்கோரை விட ஒரு 50 ரன்களாவது இந்தியா அதிகம் அடிக்க வேண்டும்.

Story first published: Wednesday, June 7, 2023, 23:02 [IST]
Other articles published on Jun 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+