Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்க்கையே இருளில் இருந்தது.. பும்ராவிடமிருந்து வந்த ஒரு மெசேஜ்.. ஆஸி. வீரர் நெகிழ்ச்சி

மும்பை: ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனுக்கு, அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவிடமிருந்து வந்த ஒரு செய்தி, தமக்கு நம்பிக்கையை அளித்ததாக கூறியுள்ளார். கிரீன் கடந்த ஆண்டு முதுகெலும்பில் ஸ்ட்ரெஸ் பிரேக்சர் ஏற்பட்டிருந்தது.

இந்த காயம் 9 முதல் 12 மாதங்களில் இயற்கையாக குணமாகியிருக்கலாம் என்றாலும், அவர் அக்டோபரில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தார். அது குறித்து பேசிய கிரீன், "நான் அறுவை சிகிச்சை செய்யவிருந்த முந்தைய இரவில் ஜஸ்ப்ரீத் பும்ரா என்னை தொடர்பு கொண்டார். அவர் இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் இருந்தார்."

Cameron Green on Jasprit bumrah

"இது போன்ற சிறு விஷயங்கள் மிகவும் சிறப்பானவை, இது மிகவும் நம்பிக்கையை அளித்தது. பும்ரா போன்ற வீரர், அறுவை சிகிச்சைக்கு பின் அபாரமாக விளையாடி பார்த்தது, எனக்கு நிறைய நம்பிக்கையை அளித்தது," என்று கிரீன் கூறினார். கிரீன் 2023 ஐபிஎல் சீசனை மும்பை இந்தியன்ஸ் அணியுடன் செலவிட்டார், அப்போது பும்ரா அதே அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வந்து கொண்டிருந்தார்.

அதன் பின் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் செல்வதில் பும்ரா முக்கிய பங்கு வகித்தார் மற்றும் கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வெற்றியை இந்தியாவுக்கு பெற்றுத் தந்தார். பின்னர், பார்டர்-கவாஸ்கர் டிராபியில், ஐந்து போட்டிகளில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் சிறந்த வீரர் விருதை வென்றார்.

இந்த செயல்பாடு தமக்கு முன் மாதிரியாக இருந்ததாக கிரீன் பட்டியலிட்டார். இதே போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு உட்பட்ட பிற பந்துவீச்சாளர்களான ஜேசன் பெஹ்ரென்டார்ஃப் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் பென் ட்வார்ஷுயிஸ் ஆகியோரிமும் ஊக்கமளிக்கும் கருத்துக்களை வழங்கியதாக கிரீன் கூறினார்.

காயத்திலிருந்து மீண்டு வந்த நேரத்தில் நண்பர்களுடன், உறவினர்களுடன் நேரத்தை செலவிட்டதாகவும், டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாமல் போனது வருத்தம் அளித்ததாகவும் அவர் கூறினார். கிரீனுக்கு ஏற்கனவே சிறுநீரகத்தில் பிறந்ததில் இருந்தே பிரச்சினை இருப்பது குறிப்பிடத்தக்கது.

கிரீன் இந்த வாரம் தொடங்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிளௌசெஸ்டர்ஷயருக்காக ஐந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் மூன்று சதங்கள் அடித்து, இந்த முக்கிய டெஸ்ட்டுக்கு அவர் செல்கிறார்.

Story first published: Monday, June 9, 2025, 15:26 [IST]
Other articles published on Jun 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+