Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரு பார்ட்னர்ஷிப் வரலாற்றாக மாற்றியது.. SA அணிக்கு சச்சின் வாழ்த்து.. ஆஸி.யை கலாய்த்த யுவராஜ்

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணி கோப்பையை கைப்பற்றி இருப்பதை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த வெற்றி தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு புதிய உத்வேகத்தை கொடுக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் தென்னாபிரிக்க அணியின் கேப்டனாக பவுமா பல கேலி கிண்டலுக்கு ஆளான நிலையில் தற்போது அவர் சாம்பியன் பட்டத்தைப் பெற்று தக்க பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Sachin Tendulkar

இந்த சூழலில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தென்னாப்பிரிக்கா அணியை வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்." டெஸ்ட் கிரிக்கெட் தொடர்ந்து தன்னுடைய மேஜிக்கை வெளிக்கொண்டு வருகிறது. இந்த இறுதிப் போட்டியில் நடந்த ஒவ்வொரு செஷனிலும் ஒரு கதை இருந்தது."

" இறுதிப்போட்டியில் நிகழ்ந்த சூறாவளியில் தென்னாப்பிரிக்க அணி கடைசி வரை அமைதி காத்து வெற்றி பெற்றிருக்கிறது. மார்க்கரம் மற்றும் பவுமா ஆகியோர் கடும் நெருக்கடியை சமாளித்து அபாரமாக விளையாடி கடைசி இன்னிங்ஸில் ரன்களை சேர்த்து இருக்கிறார்கள். இந்த சதம் இன்னும் கால காலத்திற்கு மக்களால் நினைவு வைத்துக் கொள்ளப்படும்."

" இந்தப் பாட்னர்ஷிப் பல ஆண்டுகால நம்பிக்கையை வரலாறாக மாற்றி இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன் ஆன தென்னாப்பிரிக்காவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று சச்சின் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தென்னாபிரிக்க அணியின் 27 ஆண்டுகால காத்திருப்பு தற்போது முடிவுக்கு வந்திருப்பதாக பாராட்டியுள்ளார்.

லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ள தென்னாப்பிரிக்காவிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை போல் வீரரின் திறன் மற்றும் குணாதிசயத்தை சோதிக்கும் வேறொரு விளையாட்டு கிடையாது என்று குறிப்பிட்டுள்ள யுவராஜ், இந்த மிகப்பெரிய தருணத்தில் தென்னாப்பிரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக கூறியுள்ளார்.

மார்கரமின் சதம் தரமான இன்னிங்ஸ் என்று பாராட்டியுள்ள யுவராஜ் பவுமாவின் அமைதியான தன்மை மற்றும் பயமில்லாத வீரம் தென்னாப்பிரிக்காவை சாம்பியன் ஆக்கி இருப்பதாக பாராட்டி உள்ளார். மேலும் ஒரு கோப்பை தானே தவறவிட்டிருக்கிறீர்கள் பரவாயில்லை என்று ஆஸ்திரேலியாவுக்கும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Story first published: Saturday, June 14, 2025, 23:56 [IST]
Other articles published on Jun 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+