For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரோகித் இந்த தப்ப மட்டும் செய்யவே கூடாது.. முன்னாள் வீரரின் முக்கிய அட்வைஸ்.. தவறினால் ஆப்பு தான்!

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா செய்யக்கூடாத முக்கிய விஷயம் குறித்து முன்னாள் வீரர் தீப்தாஸ் தசகுப்தா அட்வைஸ் கூறியுள்ளார்.

நாளை தொடங்கவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் இறுதிகட்ட பயிற்சிகளில் தீவிரமாக தயாராகி வரும் நிலையில் முன்னாள் வீரர்கள் அட்வைஸ் கூறி வருகின்றனர்.

சவுத்தாம்டன் பிட்ச்

சவுத்தாம்டன் பிட்ச்

இங்கிலாந்து பிட்ச் நியூசிலாந்தில் இருப்பது போன்றே இருக்கும் என்பதால், நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அது சாதகமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் உலகின் தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர்களான ட்ரெண்ட் போல்ட், டிம் சவுத்தி, கெயில் ஜேமிசன் ஆகியோர் இந்திய வீரர்களை அச்சுறுத்த தயாராகி வருகின்றனர்.

முன்னாள் வீரர் அட்வைஸ்

முன்னாள் வீரர் அட்வைஸ்

இந்நிலையில் இந்திய அணி பேட்ஸ்மேன்களுக்கு முன்னாள் வீரர் தீப்தாஸ் குப்தா அறிவுரை கூறியுள்ளார். அதில் அவர், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தெளிவான சிந்தனையுடன் செயல்பட வேண்டும். எந்தவித புது முயற்சிகளும் எடுக்காமல் தங்களது இயல்பான ஆட்டத்தை மட்டுமே வெளிப்படுத்த வேண்டும். அதற்கென்று, ஆக்ரோஷமாக ஆடுவது தான் இயல்பான ஆட்டம் என்றால் அதனையே தொடர்ந்து செய்யக்கூடாது.

ரோகித்திற்கு டிப்ஸ்

ரோகித்திற்கு டிப்ஸ்

தொடக்க வீரராக களமிறங்கப்போகும், ரோஹித் ஷர்மா கட் ஷாட், புல் ஷாட்களில் சிறப்பாக செயல்படக்கூடியவர். அதற்கென்று அனைத்தையும் அடித்து ஆட வேண்டுமென்பதில்லை. சரியான டைமிங்குடன் அமையும் பவுன்சர் பந்துகளை மட்டுமே பவுண்டரி அடிக்க வேண்டும். அதுவும் சரியான மன தெளிவுடன் இருந்தால் மட்டுமே முயற்சிக்க வேண்டும். இல்லையென்றால் நிதானமாக செயல்படலாம். இந்த தெள்வு ரோகித்திடம் மிக முக்கியமாக இருக்க வேண்டும்.

ஓப்பனிங் எதிர்பார்ப்பு

ஓப்பனிங் எதிர்பார்ப்பு

டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது ரோகித் சர்மா ஓப்பனராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடைசியாக நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பிட்ச் மிக கடினமானதாக இருந்த போதும் ரோகித் சர்மா ஸ்கோரை உயர்த்தினார். ஆனால் இங்கிலாந்தில் தற்போது தான் முதல் முறையாக ஓப்பனிங் களமிறங்கவுள்ளார். அவரின் ஆட்டம் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, June 17, 2021, 20:32 [IST]
Other articles published on Jun 17, 2021
English summary
WTC final: Deep Dasgupta gives a advice for the Rohit shama to face New Zealand Bowling attack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+