Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

முக்கிய போட்டியில் கோலியின் ரிஸ்க்.. இரு வீரர்கள் மீது அதீத நம்பிக்கை..மொத்த ஆட்டமும் அவர்கள் கையில்

சவுத்தாம்டன்: இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரு வீரர்களின் மீது நம்பிக்கை வைத்து மிகப்பெரும் ரிஸ்கை எடுத்து வருகிறார்

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி கடைசி தினத்தை எட்டியுள்ளது.

முதல் 5 நாட்களிலும் மழை பாதிப்பு இருந்ததால் ரிசர்வ் டே கொடுக்கப்பட்ட ஆட்டம் சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருக்கிறது.

நம்பிக்கை

நம்பிக்கை

முதல் இன்னிங்ஸில் இந்திய அணியை (217 ரன்கள்) விட நியூசிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலை பெற்று 249 ரன்களை குவித்தது. இதனையடுத்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5ம் நாள் முடிவு வரை 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்தது. 6ம் நாளான இன்று கேப்டன் விராட் கோலி மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் போட்டியை தொடங்கினர்.

அதிரடி திட்டம்

அதிரடி திட்டம்

கடைசி நாளான இன்று 98 ஓவர்கள் முழுமையாக வீசப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் பொறுமையாக விளையாடிய அவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் இந்திய அணி இன்றைய போட்டியில் பெரும்பாலான நேரத்தை மட்டைப்போட்டு சமன் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் கோலி அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

ஆக்ரோஷ ஆட்டம்

ஆக்ரோஷ ஆட்டம்

அதாவது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் முடிந்தவரை அதிரடி காட்ட வேண்டும் என்றும், வேகமாக ரன்களை உயர்த்திய பிறகு நியூசிலாந்தை 2வது இன்னிங்ஸிக்கு விரைவாக அழைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். குறிப்பாக லோயர் ஆர்டரில் இருக்கும் ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா பேட்டை நன்கு சுழற்ற வேண்டும் எனத்தெரிவித்துள்ளார். ஏனென்றால் அவர்களை அடுத்தடுத்து வெளியேற்றி விட முடியும் என்ற நம்பிக்கை கோலிக்கு உள்ளது.

நம்பிக்கை நட்சத்திரங்கள்

நம்பிக்கை நட்சத்திரங்கள்

இந்த போட்டியில் கோலி இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பதற்கு அஸ்வின் மற்றும் ஜடேஜாவே காரணம். சவுத்தாம்டனில் கடந்த 5 நாட்களாக மழை பெய்த நிலையில் தற்போது நல்ல வெயில் அடித்து வருகிறது. இதனால் பிட்ச் வறண்டு சுழற்பந்துவீச்சு சாதகமாகும் சூழல் நிலவுகிறது. சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பிட்ச் கிடைத்துவிட்டால் அஸ்வின் - ஜடேஜா ஜோடி அடுத்தடுத்து விக்கெட்களை சரிக்க கூடியவர்கள். எனவே இன்றைய போட்டியிலும் அவர்களின் கணக்கு பழிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Wednesday, June 23, 2021, 19:28 [IST]
Other articles published on Jun 23, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+