For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

”அவரின் பேட்டிங் பார்த்து மிரண்டுட்டேன்” 50வது டெஸ்டில் ரோகித் சர்மா.. நண்பனை வாழ்த்திய விராட் கோலி!

லண்டன்: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 50வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள நிலையில், ஓவல் மைதானத்தில் சதம் விளாச வேண்டும் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி வாழ்த்தியுள்ளார்.

இந்திய கிரிக்கெட்டின் முன்னணி வீரர்களான விராட் கோலி - ரோகித் சர்மா இடையிலான நட்பு குறித்து அனைவரும் அறிந்ததே. களத்தில் இருவரும் வெளிப்படுத்தும் கொண்டாட்டம், பேட்டிங் போது ஒருவரை புரிந்து ஒருவர் செய்யும் உதவி என்று இருவரின் நட்பும் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் ரோகித் சர்மா - விராட் கோலி இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டது. அதனை தொடக்க நிலையிலேயே அறிந்த ரவி சாஸ்திரி, இருவரையும் சமாதானப்படுத்தினார்.

WTC Final: when I saw Rohit Sharma batting for the very first time, I understood why he was rated so highly says Virat Kohli

இருப்பினும் இருவரும் பழைய மாதிரி நட்பை வெளிப்படுத்தவில்லை. ஆனால் 2022 டி20 உலகக்கோப்பைக்கு பின் விராட் கோலி - ரோகித் சர்மா இருவரும் மீண்டும் பழைய நண்பர்களாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் களமிறங்க தயாராக உள்ளன. இந்தப் போட்டியில் விளையாடுவதன் மூலம் கேப்டன் ரோகித் சர்மா, தனது 50வது டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளார்.

நீண்ட ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அசத்தி வந்த ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் போட்டி மட்டும் கைகூடவே இல்லை. ஆனால் 2019ஆம் ஆண்டு முதல் தொடக்க வீரராக ரோகித் சர்மா மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் 50வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ரோகித் சர்மாவுக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், முதல்முறையாக ரோகித் சர்மா பேட்டிங் செய்வதை பார்த்த போதுதான், எதற்காக அவர் பற்றி அதிகமாக பில்டப் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்துகொண்டேன். அனைத்து வீரர்களாலும் ஏன் ரோகித் சர்மா பாராட்டப்பட்டார் என்பதை தெரிந்துகொண்டேன்.

WTC Final: when I saw Rohit Sharma batting for the very first time, I understood why he was rated so highly says Virat Kohli

கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக ரோகித் சர்மா சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்குவது அவ்வளவு சாதாரணம் கிடையாது. ஆனால் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் ரோகித் அசத்தி வருகிறார். அவரின் திறமைக்கு அதுவொரு சோதனையாகவே இருந்தது. ஆனால் இங்கிலாந்து மண்ணிலேயே சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். கடந்த முறை ஓவல் மைதானத்தில் சதம் விளாசியதை போல், மீண்டும் சதம் விளாச வேண்டும் என்று வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.

Story first published: Wednesday, June 7, 2023, 10:55 [IST]
Other articles published on Jun 7, 2023
English summary
WTC Final: Virat Kohli said, when I saw Rohit Sharma batting for the very first time, I understood what the hype was all about and why he was rated so highly.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+