For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜெய்ஸ்வால் படைத்த சாதனை விவரம்.. அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர்கள் முழு பட்டியல்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுக போட்டியிலே சதம் விளாசி ஜெய்ஸ்வால் அசத்தியிருக்கிறார். இதன் மூலம் ஜெய்ஸ்வால் பல ரெகார்டுகளை படைத்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமாகிய ஜெய்ஸ்வால் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்துள்ளார் . இதன் மூலம் அறிமுக போட்டியில் சதம் விளாசிய 17 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.

jaiswal century

மேலும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அறிமுகமாகி சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமானது. இதே போன்று 92 ஆண்டு கால இந்திய கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டில் அறிமுகப் போட்டியில் சதம் விளாசிய முதல் இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையும் ஜெய்ஸ்வால் பெற்றார். ஒட்டுமொத்தமாக அறிமுக போட்டியில் சதம் அடித்த ஐந்தாவது இந்திய தொடக்க வீரர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வாலுக்கு சொந்தமானது.

இந்த நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு முன் பதினாறு இந்திய வீரர்கள் அறிமுகப் போட்டியில் சதம் அடித்திருக்கிறார்கள். இதில் 1933 ஆம் ஆண்டு லாலா அமர்நாத்,1952 ஆம் ஆண்டு தீபக் சோடன், 1955 ஆம் ஆண்டு கிரிபால் சிங்,1959 ஆம் ஆண்டு அப்பாஸ் அலி, 1964ஆம் ஆண்டு ஹனுமாந்த் சிங், 1969 ஆம் ஆண்டு குண்டப்பா விஸ்வநாத்,1976 ஆம் ஆண்டு சுரேந்தர் அமர்நாத்.

1984 ஆம் ஆண்டு முகமது அசாருதீன், 92 ஆம் ஆண்டு பிரவீன் ஆம்ரே, 96 ஆம் ஆண்டு கங்குலி, 2001 ஆம் ஆண்டு விரேந்தர் சேவாக் , 2010 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா, 2013 ஆம் ஆண்டு ஷிகர் தவான், 2013 ஆம் ஆண்டில் ரோகித் சர்மா, 2018 ஆம் ஆண்டு பிரித்வி ஷா 2021 ஆம் ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இந்த சாதனையை படைத்திருக்கிறார்கள்.

இதில் ரோகித் சர்மா மற்றும் பிரித்விஷா ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் எதிராக தான் தங்களுடைய அறிமுக சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார்கள். இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள பல வீரர்கள் பல சாதனைகளை இதன் பிறகு செய்திருக்கிறார்கள். சில வீரர்கள் எதிர்பார்த்த அளவு டெஸ்ட் போட்டியில் ஜொலிக்க முடியவில்லை.இந்த பட்டியலில் 17வது வீரராக இடம் பிடித்துள்ள ஜெய்ஸ்வால் எந்த அளவு சாதனை படைப்பார் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Story first published: Friday, July 14, 2023, 1:05 [IST]
Other articles published on Jul 14, 2023
English summary
Yashasvi jaiswal century records and list of indians who scored century on debut test ஜெய்ஸ்வால் படைத்த சாதனை விவரம்.. அறிமுக டெஸ்டில் சதம் அடித்த இந்திய வீரர்கள் முழு பட்டியல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+