Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்போ தான் கத்துக்கிட்டு இருக்கேன் சார்.. எனக்குள்ளே பேசி கொண்டேன்..சாதனை ஆட்டம் குறித்து ஜெய்ஷ்வால்

கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 13 பந்தில் அரைசதம் அடித்து வரலாற்று சாதனையை 21 வயதான ஜெய்ஷ்வால் படைத்திருக்கிறார். அத்துடன் தனது விக்கெட்டை விட்டு கொடுக்காமல் அணியின் ரன் ரேடுக்காக கடைசிவரை சிறப்பாக ஆடி ஆட்டம் இழக்காமல் 47 பந்துகளில் 98 ரன்கள் ஜெய்ஸ்வால் அடித்திருக்கிறார்.

இதில் 12 பவுண்டரிகளும் ஐந்து இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் நேற்று மட்டும் ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது உட்பட ஐந்து விருதுகளை வென்றார். இந்த நிலையில் தனது ஆட்டம் குறித்து பேசிய ஜெய்ஷ்வால் நான் எப்போதுமே மனதில் நன்றாக விளையாட வேண்டும்.

Yashasvi Jaiswal speech about his historical innings cs kkr

அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என்று நினைப்பேன். இன்று ராஜஸ்தான் அணிக்காக வெற்றியை பெற்றுக் கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்று நடந்தது எல்லாம் சரியாக நடந்து விட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் சிறப்பாக செயல்பட வேண்டும் என நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். முடிவு குறித்து நான் யோசிக்காமல் என்னுடைய பயிற்சியில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்.

எனக்குள்ளே நன்றாக விளையாட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பேன். இன்றைய ஆட்டத்தில் கடைசி சாட் ஆடி அணியின் வெற்றியை உறுதி செய்தது என் மனதுக்கு நெருக்கமாக இருந்தது. ஆட்டம் முடியும் வரை களத்தில் நின்று விளையாடுவது எப்படி என்று நான் கற்றுக் கொண்டு வருகிறேன். எனக்கும் எனது அணியும் நான் வெற்றி பெற்று தர வேண்டும் அதுதான் என்னுடைய குறிக்கோள். இதுபோன்ற சிறந்த தொடரில் நான் விளையாடுவதை நினைத்து பெருமை கொள்கிறேன்.

ஜாம்பவான் வீரர்கள் முன் விளையாடுவதை நினைத்து நான் மகிழ்கிறேன். மீண்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதிலே எனது குறி இருக்கிறது. எங்களுடைய அணியின் ரன் ரேட்டை அதிகப்படுத்த வேண்டும் என்பதை பற்றித்தான் நானும் சஞ்சு சம்சனும் களத்தில் பேசிக்கொண்டோமே தவிர என்னுடைய சதத்தை பற்றி நான் யோசிக்கக்கூட இல்லை.

ஜாஸ் பட்லரை ரன் அவுட் ஆக்கிய விதம் துரதிஷ்டவசமானது. நான் வேண்டுமென்று அந்த தவறை செய்யவில்லை. அப்போது களத்துக்கு வந்த சஞ்சு சாம்சன், அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே. நீ உன் ஆட்டத்தில் கவனம் செலுத்து என்று கூறினார். நிச்சயமாக ஐபிஎல் என்னை போன்ற ஒரு இளம் வீரர்களுக்கு எல்லாம் சிறந்த வாய்ப்பையும் மேடையையும் கொடுக்கிறது என்று ஜெய்ஸ்வால் கூறினார்.

Story first published: Thursday, May 11, 2023, 23:32 [IST]
Other articles published on May 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+