Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மோடி வருகிறார்னு யாருமே சொல்லவில்லை.. ஒரே நாளில் வீணான உழைப்பு..உலககோப்பை தோல்வி குறித்து முகமது ஷமி

மும்பை : 2023 ஆம் ஆண்டு தற்போது முடியும் தருவாயில் உள்ளது. ஆனால் ரசிகர்கள் மனதிலும் கிரிக்கெட் வீரர்கள் மனதிலும் நவம்பர் 19ஆம் தேதி அடைந்த உலகக்கோப்பை இறுதி போட்டி தோல்வி இன்னும் நீங்கவே இல்லை.

12 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையை வென்று விடலாம் என நினைத்த ரசிகர்களுக்கு கடைசி போட்டியில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முகமது சமி இடம்பெற்று இருந்தாலும் காயம் காரணமாக கடைசி நேரத்தில் பங்கேற்க முடியவில்லை.

Year ender 2023- Mohammed shami opens up about world cup final loss and PM Modi visit


இந்த நிலையில் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த முகமது சமியிடம், உலககோப்பை தோல்வி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சமி உலக கோப்பையை நாங்கள் இழந்தபோது ஒட்டுமொத்த தேசமே ஏமாற்றம் அடைந்தது. நாங்கள் அந்த தொடர் இறுதி வரை எங்களுடைய 100 சதவீத உழைப்பை வெளிப்படுத்தினோம். தொடர் முழுவதும் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் இறுதிப் போட்டியில் என்ன தவறு நடந்தது என்பது குறித்து என்னால் விவரிக்க முடியவில்லை. இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு எங்கள் மனம் உடைந்து இருந்தது. நாங்கள் வாழ்க்கையை வெறுத்துப் போய் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்தோம்.ஏனென்றால் எங்களுடைய இரண்டு மாத உழைப்பு ஒரே ஒரு மோசமான நாளால் ஒரு போட்டியால் மொத்தமாக வீணாகிவிட்டது.

இந்த தருணத்தில் தான் பிரதமர் மோடி எங்களுடைய ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தார். பிரதமர் முன் சோகாமல் நிற்க முடியாது அல்லவா. அவர் வரும்போது நாம் கொஞ்சம் மரியாதை கொடுத்து நிற்க வேண்டும். பிரதமர் மோடி எங்களை பார்க்க வருகிறார் என்று யாருமே எங்களிடம் சொல்லவில்லை. திடீரென்று அவர் எங்களுடைய ரூமில் வந்து விட்டார்.

அவர் வருவதற்கு முன்பு வரை யாரிடமும் பேசவும் சாப்பிடவும் கூட எங்களால் முடியவில்லை. ஆனால் அவர் வந்த பிறகு அது எங்களுக்கு பெரிய ஆச்சரியமாக இருந்தது என்று சமி கூறினார் இறுதிப் போட்டியில் பிறகு பிரதமர் மோடி முகமது சமியை கட்டி அணைத்து ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 27, 2023, 23:18 [IST]
Other articles published on Dec 27, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+