கேப்டன் கம்மின்ஸ் முதுகில் குத்திய ஆஸ்திரேலியா.. பும்ராவுக்கு கிடைத்த கவுரவம்.. இதை கவனிச்சீங்களா?
மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சிறந்த கேப்டன்களில் ஒருவராக பாட் கம்மின்ஸ் இருக்கிறார். ஆஸ்திரேலிய அணி தடுமாறிய காலத்தில் கேப்டனாக கம்மின்ஸ் வந்தார். 50 ஓவர் உலகக் கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசஸ் தொடர் என அனைத்திலும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருக்கிறது
இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்து இருக்கிறது. இதில் கம்மின்ஸ் இடம்பெறாதது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த வகையில் தொடக்க வீரராக இந்தியாவின் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

நடப்பு ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 1478 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் மூன்று சதங்கள் அடங்கும். மற்றொரு தொடக்க வீரராக இங்கிலாந்து அணியின் பென் டக்கட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 17 போட்டியில் 1149 ரன்கள் அடித்திருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜோரூட் இருக்கிறார். இவர் 17 போட்டியில் விளையாடி 1556 ரன்கள் அடித்து இருக்கிறார். இதில் ஆறு சதம் அடங்கும்.
நான்காவது இடத்தில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா இடம் பெற்றுள்ளார். ரச்சின் ரவீந்திரா, நடப்பு ஆண்டில் 984 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதங்கள் அடங்கும். ஐந்தாவது இடத்தில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரான ஹாரி புரூக் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இவர் 12 போட்டிகளில் 1100 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் நான்கு சதம் அடங்கும்.
இந்த பட்டியலில் ஆறாவது இடத்தில் இலங்கையைச் சேர்ந்த கமீண்டு மெண்டீஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 9 போட்டிகளில் விளையாடிய அவர், 1049 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 5 சதங்கள் அடங்கும். இந்த பட்டியலில் ஏழாம் இடத்தில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இருக்கிறார். அலெக்ஸ் கேரி 9 போட்டிகளில் விளையாடி 440 ரன்கள் அடித்திருக்கிறார். 46 டிஸ்மிசல் அவர் செய்திருக்கிறார்.
இந்த பட்டியலில் எட்டாம் இடத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்ரி இருக்கிறார். அவர் 9 போட்டியில் விளையாடி 48 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த பட்டியலில் 9வது இடத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் பும்ரா இடம் பிடித்திருக்கிறார். பும்ரா பதிமூன்று போட்டியில் விளையாடி 71 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.
இந்த அணியின் கேப்டனாக பும்ரா தான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பட்டியலில் 11வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஹேசல்வுட் இடம்பிடித்திருக்கிறார். 15 போட்டு விளையாடி 35 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று இந்த அணியின் சுழற் பந்துவீச்சாளராக 11வது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகராஜ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். மகராஜ் பதினைந்து போட்டிகளில் விளையாடி 35 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications