For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி, ரோஹித் முதல் ஜான் சீனா வரை.. 2025-ல் கண்ணீருடன் விடைபெற்ற விளையாட்டு ஜாம்பவான்கள்

மும்பை: 2025-ம் ஆண்டு முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டு விளையாட்டு உலகம் சந்தித்த பல ஓய்வுகள் வலியை அளிப்பதாக இருந்தன. பல ஆண்டுகளாகத் தங்கள் ராஜ்ஜியத்தை ஆண்ட விளையாட்டு உலகின் ஜாம்பவான்கள் இந்த ஆண்டு ஓய்வு அறிவித்து ரசிகர்களைக் கண்ணீரில் மூழ்கடித்தனர். ஒரு தலைமுறை மாற்றத்தை உணர்த்திய 2025-இல் பல்வேறு விளையாட்டுக்களில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் பட்டியல் -

ரோஹித் சர்மா (இந்தியா - டெஸ்ட் கிரிக்கெட்)

மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா. இக்கட்டான நேரங்களில் இந்திய டெஸ்ட் அணியைத் தாங்கிப் பிடித்த ரோஹித், 4300+ ரன்களுடன் விடைபெற்றார். "டெஸ்ட் போதும், ஆனால் 2027 உலகக்கோப்பை கனவுக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் ஆடுவேன்" என அவர் கூறியது ரசிகர்களுக்குச் சற்றே ஆறுதல். இயற்கையான திறமை கொண்ட உலகின் மிகச்சிறந்த ஓப்பனர்களில் ஒருவரை இனி டெஸ்ட் அரங்கில் இழப்போம்.

Year Ender 2025 Retirement of Legends Like Virat Kohli Rohit Sharma and John Cena

விராட் கோலி (இந்தியா - டெஸ்ட் கிரிக்கெட்)

ரோஹித் கொடுத்த அதிர்ச்சி மறைவதற்குள், மே 12, 2025 அன்று அடுத்த இடியை இறக்கினார் 'கிங்' கோலி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னி மைதானத்தில் நடந்த போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு குட்-பை சொன்னார். இந்திய அணியில் உடற்தகுதி, ஆக்ரோஷம் என மொத்த முகத்தையும் மாற்றியவர் விராட். 29 டெஸ்ட் சதங்கள், இந்தியாவின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையுடன் வெளியேறினார் விராட் கோலி. அவரும் 2027 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடருக்காக தயாராகி வருகிறார்.

ஜான் சீனா (அமெரிக்கா - WWE பொழுதுபோக்கு மல்யுத்தம் )

90ஸ் கிட்ஸுகளின் குழந்தைப் பருவ ஹீரோ ஜான் சீனாவும் இந்த ஆண்டு ஓய்வு பெற்றார். டிசம்பர் 13, 2025 அன்று நடந்த முக்கிய போட்டியில் குந்தர் (Gunther) வசம் தோல்வியைத் தழுவி, தனது 23 ஆண்டுகால சாம்ராஜ்யத்தை முடித்துக்கொண்டார். "யூ கான்ட் ஸீ மீ (You Can't See Me)" எனச் சொல்லி மிரட்டிய ஜான் சீனாவை, இனி போட்டிகளில் பார்க்கவே முடியாது என்பது சோகம்தான்.

ரஃபேல் நடால் (ஸ்பெயின் - டென்னிஸ்)

டென்னிஸ் உலகின் மாபெரும் ஜாம்பவான்களில் ஒருவரான ரஃபேல் நடால், இந்த ஆண்டு முழுமையாக ஓய்வு பெறுவதாக பெற்றார். 2024 டேவிஸ் கோப்பையிலேயே அவர் கடைசிப் போட்டியை ஆடிவிட்டாலும், 2025 முழுவதும் அவருக்கான பிரியாவிடை வைபவமாகவே இருந்தது. 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்... அதில் 14 பிரெஞ்சு ஓபன் பட்டங்கள்! "இனி என் உடல் ஒத்துழைக்காது" எனச் சொல்லி நடால் விடைபெற்றபோது, பாரிஸ் நகரமே சோகத்தில் ஆழ்ந்தது.

வந்தனா கட்டாரியா (இந்தியா - ஹாக்கி)

இந்திய மகளிர் ஹாக்கி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய வந்தனா கட்டாரியா இந்த ஆண்டு ஓய்வு பெற்றார். 320 போட்டிகள், 158 கோல்கள் என மிரட்டியவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் கோல் அடித்து சரித்திரம் படைத்த இந்தியாவின் ஒரே வீராங்கனை இவர்தான். இவரது ஓய்வால் இந்திய மகளிர் ஹாக்கியின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்தது.

ரோஹன் போபண்ணா (இந்தியா - டென்னிஸ்)

வயது வெறும் எண் மட்டுமே என நிரூபித்த ரோஹன் போபண்ணா, நவம்பர் 1-ம் தேதி பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடருடன் ஓய்வு பெற்றார். 2024-ல் அதிக வயதில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனையைப் படைத்த அவர், இனி இளம் வீரர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தவுள்ளார்.

கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா - கிரிக்கெட்)

ஆஸ்திரேலியாவின் 'மேட் மேக்ஸ்' கிளென் மேக்ஸ்வெல், சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கு பிறகு ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றைக்காலில் நின்று அவர் அடித்த அந்த 201* ரன்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்குப் பேசப்படும். இனி டி20 லீக்குகளில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும்.

ஹென்ரிக் கிளாசன் (தென்னாப்பிரிக்கா - கிரிக்கெட்)

இந்த ஆண்டின் மிகப்பெரிய அதிர்ச்சி இதுதான். உலகின் மிக ஆபத்தான ஃபினிஷரான ஹென்ரிக் கிளாசன், 34 வயதிலேயே அனைத்து விதமான சர்வதேசப் போட்டிகளிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். டி20 லீக் மற்றும் குடும்பத்திற்காக அவர் எடுத்த இந்த முடிவு, தென்னாப்பிரிக்க அணிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

சைமன் கியர் (டென்மார்க் - கால்பந்து)

டென்மார்க் மற்றும் ஏசி மிலன் அணியின் தடுப்புச் சுவர் சைமன் கியர், ஜனவரி 13 அன்று ஓய்வு பெற்றார். யூரோ கோப்பையில் எரிக்சன் சுருண்டு விழுந்தபோது, ஒரு கேப்டனாக அவர் செயல்பட்ட விதம் அவரை என்றென்றும் நினைவுகூர வைக்கும்.

மார்செலோ (பிரேசில் - கால்பந்து)

ரியல் மாட்ரிட் அணியின் பல வெற்றிகளை படைத்ததில் முக்கிய பங்கு வகித்த பிரேசில் லெஃப்ட்-பேக் மார்செலோ, பிப்ரவரி 6 அன்று ஓய்வு பெற்றார். 5 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளை வென்ற இவர், கால்பந்து உலகின் மிகச்சிறந்த தற்காப்பு வீரர்களில் ஒருவர்.

Story first published: Friday, December 26, 2025, 12:43 [IST]
Other articles published on Dec 26, 2025
English summary
Year Ender 2025: Retirement of Legends Like Virat Kohli, Rohit Sharma, and John Cena
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+