Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன நடந்தாலும் சிஎஸ்கேதான் கிங்..இதை டேட்டாவை பாருங்க.. ஐபிஎல் ரசிகர்களை ஆடிப்போக வைத்த டிவிட்டர்!

சிட்னி: 2020ல் டிவிட்டர் உலகை சிஎஸ்கே அணிதான் ஆட்டிப்படைத்து உள்ளதாக டிவிட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020ல் நடந்த ஒரு சில நல்ல விஷயங்களில் ஐபிஎல்லும் ஒன்று. வருடம் முழுக்க நிறைய கெட்ட செய்திகள் வந்த நிலையில் விளையாட்டு உலகில் ஐபிஎல் மட்டுமே கொஞ்சம் நிம்மதி அளித்தது.

அதிலும் எந்த வருடமும் இல்லாத வகையில் இந்த வருட ஐபிஎல் சீசன் மிகவும் சிறப்பாக அமைந்து இருந்தது. பல திருப்பங்கள், டிவிஸ்டுகளுடன் இந்த வருட ஐபிஎல் அமைந்து இருந்தது.

நிலை என்ன

நிலை என்ன

இந்த வருட சீசனில் எப்போதும் போல மும்பை அணி சிறப்பாக ஆடி கோப்பையை வென்றது. தங்களை ஜாம்பவான் அணி என்று மும்பை மீண்டும் ஒருமுறை நிரூபித்தது. ரோஹித் சர்மா இல்லாமல் கூட இந்த சீசனில் மும்பை சில போட்டிகளில் அதிரடியாக வென்றது.

மோசம்

மோசம்

ஆனால் எப்போதும் மும்பை அணிக்கு டப் பைட் கொடுக்கும் சிஎஸ்கே அணி இந்த முறை துவண்டு போய்விட்டது. பெரிய அளவில் சிஎஸ்கே அணி இந்த முறை ஆடவில்லை. முதல் போட்டியில் மும்பையில் வீழ்த்தினாலும் அடுத்தடுத்து சொதப்பி பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. கடைசியில் மட்டும் மூன்று போட்டிகளில் வரிசையாக வென்று நம்பிக்கை அளித்தது.

நம்பிக்கை

நம்பிக்கை

இந்த நிலையில் 2020ல் டிவிட்டர் உலகை சிஎஸ்கே அணிதான் ஆட்டிப்படைத்து உள்ளதாக டிவிட்டர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. என்னதான் மோசமாக ஆடி இருந்தாலும் சிஎஸ்கே அணியை பற்றித்தான் இந்த வருடம் டிவிட்டரில் அதிகம் பேசி உள்ளார். இந்த வருடம் விளையாட்டு தொடர்பாக அதிகம் டிரெண்ட் செய்யப்பட்ட ஹேஷ்டேக் #IPL2020 என்பது ஆகும்.

வேறு டேக்

வேறு டேக்

அதற்கு அடுத்து அதிகம் டிரெண்ட் செய்யப்பட்ட விளையாட்டு ஹேஷ்டேக் #WhistlePodu என்பதாகும். சிஎஸ்கே குறித்து குறிப்பிடுவதற்காக #WhistlePodu என்ற டேக் உருவாக்கப்பட்டது. இந்த வருடம் பல கோடி டிவிட்கள் இந்த #WhistlePodu ஹேஷ்டேக்கிற்கு கீழ் டிவிட் செய்யப்பட்டுள்ளது.

முக்கியம்

முக்கியம்

கிரிக்கெட் உலகில் முக்கியமான ஹேஷ்டேக்காக இந்த வருடம் #WhistlePodu உருவெடுத்துள்ளது. மும்பை, டெல்லி, பெங்களூர் போன்ற அணிகள் இந்த முறை சிறப்பாக விளையாடியும் கூட பலரும் சிஎஸ்கே குறித்துதான் பேசி உள்ளனர். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்பு காரணமாக #WhistlePodu டேக் இணையம் முழுக்க இந்த வருடம் ஹிட் அடித்துள்ளது.

Story first published: Wednesday, December 9, 2020, 12:49 [IST]
Other articles published on Dec 9, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+