
அணியில் இணைந்த ரோகித்
தன்னுடைய 14 நாட்கள் குவாரன்டைனை முடித்துள்ள குறைந்த ஓவர்கள் கிரிக்கெட்டின் துணை கேப்டன் ரோகித் சர்மா நேற்றைய தினம் இந்திய அணியில் இணைந்துள்ளார். இதையடுத்து அவரை இந்திய அணி வீரர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். அவரை கட்டியணைத்து சிறப்பான வரவேற்பை அளித்தனர்.

கட்டியணைத்து வரவேற்பு
உணவு சாப்பிடும் இடத்திற்கு சென்ற ரோகித்திற்கு முதலில் பிரித்வி ஷா, ரவீந்திர ஜடேஜா மற்றும் விரித்திமான் சாஹா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர் தொடர்ந்து ஜஸ்பிரீத் பும்ரா, குல்தீப் யாதவ், நடராஜன் ஆகியோரும் அவரை கட்டியணைத்து வரவேற்றனர்.
ரவி சாஸ்திரி பாராட்டு
தொடர்ந்து சத்தீஸ்வர் புஜாரா வரவேற்பு தெரிவித்தார். இதையடுதது ரோகித் சர்மாவிற்கு வாழ்த்து தெரிவித்த அணியின் தலைமை கோச் ரவி சாஸ்திரி, அவரது குவாரன்டைன் குறித்து விசாரித்தார். மேலும் அவர் மிகவும் இளமையாக மாறிவிட்டதாவும் பாராட்டு தெரிவித்தார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

பங்கேற்கும் ரோகித் சர்மா
காயம் காரணமாக ஐபிஎல்லில் இருந்து நேரடியாக இந்தியா திரும்பிய ரோகித் சர்மா, அங்கு என்சிஏவில் தனது பிட்னசை நிரூபித்துவிட்டு, தற்போது சிட்னியில் 14 நாட்கள் குவாரன்டைனையும் முடித்துள்ளார். இதையடுத்து அவர் வரும் 7ம் தேதி துவங்கவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்று ஆடவுள்ளார்.


Click it and Unblock the Notifications