Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரூ.200ல் இருந்து இந்திய அணி வரை..!! கிரிக்கெட்டுக்காக வாழ்க்கையில் போராடிய வீரரின் கண்ணீர் கதை

Recommended Video

கிரிக்கெட்டுக்காக வாழ்க்கையில் போராடிய வீரரின் கண்ணீர் கதை

மும்பை: உள்ளூர் போட்டிகளில் வெறும் 200 ரூபாயை பெற்றுக் கொண்டு, விளையாடி, தமது வியத்தகு திறமையால் இந்திய அணியில் இடம்பெற்று இருக்கிறார் நவ்தீப் சைனி.

உலக கோப்பை தோல்விக்கு பின்னர் நிகழ்ந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட ஒரு நாள் மற்றும் டி 20 போட்டி அணியில் நவ்தீப் சைனி புதுமுக பந்துவீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹரியானாவைச் சேர்ந்தவர் நவ்தீவ் சைனி. இதுவரை 13 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடந்த உலக கோப்பையில் இந்திய அணி வலைப்பயிற்சி மேற்கொள்ள பிசிசிஐ தேர்வு செய்த பவுலர்களில் முக்கியமானவராக நவ்தீப் சைனி இருந்துள்ளார்.

விளையாடிய அணிகள்

விளையாடிய அணிகள்

இவர் இதுவரை டெல்லி, இந்தியா ஏ, டெல்லி கேப்பிடல்ஸ், இந்தியா கிரீன், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், ரெஸ்ட் ஆப் இந்தியா, இந்தியா பி, இந்தியா சி ஆகிய அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 2013ம் ஆண்டு வரை இவர் பெரும்பாலும் டென்னிஸ் பந்தில் விளையாடும் போட்டிகளிலேயே ஆடியுள்ளார்.

ரூ.200க்காக விளையாடியவர்

ரூ.200க்காக விளையாடியவர்

உள்ளூரில் ஒரு போட்டிக்கு 200 ரூபாயை பெற்றுக் கொண்டு விளையாடிய நவ்தீப் சைனி தமது திறமையால் தற்போது இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவரை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தியதில் மிக முக்கியமானவர் முன்னாள் இந்திய வீரரும், தற்போதைய எம்பியுமான கவுதம் கம்பீர்தான்.

வலைப்பயிற்சி

வலைப்பயிற்சி

டெல்லி அணிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட சைனிக்கு பூட்ஸ் வாங்கி கொடுத்ததும் அவர் தான். பின்னர், நாள் தவறாது பயிற்சியில் இறங்குமாறு ஊக்கப்படுத்தியதும் அவரே.

காரணம் கம்பீர் தான்

காரணம் கம்பீர் தான்

இது பற்றி நவ்தீப் கூறியிருப்பதாவது: முன்னதாக கம்பீர் பற்றிப் பேசிய நவ்தீப், எங்கேயோ விளையாடிக் கொண்டு இருந்தேன். ஹரியானாவில் கூட யாருக்கும் என்னைத் தெரியாது. கவுதம் கம்பீர் தான் என்னை அழைத்து வந்து டெல்லி அணிக்காக விளையாட வைத்தார்.

அணியில் இடம்பெற்றேன்

அணியில் இடம்பெற்றேன்

என்னுடைய திறமைகளில் அதிக நம்பிக்கை வைத்த அவரை நான் வாழ்நாளில் மறக்க மாட்டேன். அவரை பற்றி பேசினாலே நான் என்னை அறியாமல் உணர்ச்சி வசப்பட்டவனாக மாறி விடுகிறேன். டெல்லி அணிக்காக விளையாடும் போது என்னை பல முறை ஊக்கப்படுத்தி இருக்கிறார் அவர். ஒருநாள் இந்திய அணியில் நான் இடம் பெறுவேன் என்றும் எனக்கு கம்பீர் நம்பிக்கை ஊட்டினார் என்று கூறினார்.

Story first published: Monday, July 22, 2019, 20:41 [IST]
Other articles published on Jul 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+