Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குருவை மிஞ்சிய சிஷ்யன்…!! தோனியிடம் கத்துகிட்டு, அவரது சாதனையையே காலி செய்த அந்த இளம் வீரர்..!!

Recommended Video

Pant breaks Dhoni's record | தோனி சாதனையை காலி செய்த ரிஷப் பண்ட்- வீடியோ

கயானா: டி 20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்திருக்கிறார் இளம் வீரர் ரிஷப் பன்ட்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை இந்தியா ஒயிட் வாஷ் செய்தது. நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், 146 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் 3க்கு பூஜ்யம் என தொடரையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறது இந்திய அணி.

தொடக்கம் சொதப்பல்

தொடக்கம் சொதப்பல்

இந்தப் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களான தவான், கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் எதிர்பார்த்த அளவு பங்களிப்பை அளிக்கவில்லை. மாறாக விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினர்.

இருவரும் அதிரடி

இருவரும் அதிரடி

அடுத்து வந்த கோலியும், ரிஷப் பன்டும் அதிரடியாக ஆட தொடங்கினர். கடந்த 2 போட்டிகளில் மிக மோசமான பார்மில் இருந்து கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான பன்ட் சூழ்நிலையை புரிந்து கொண்டு ஆடினார்.

பன்ட் 65 ரன்கள்

பன்ட் 65 ரன்கள்

கோலியும், பன்டும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். கோலி 59 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பன்ட் 42 பந்துகளை எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்கோரில் தலா 4 பவுண்டரிகளும், சிக்சர்களும் அடங்கும்.

புதிய சாதனை

புதிய சாதனை

அவரது இந்த ரன்னில் ஒரு முக்கிய சாதனையையும் படைத்துள்ளார். அதாவது, ரிஷப் பன்ட், தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஒருவர் அடித்த அதிகபட்ச ரன் இது தானாகும்.

சிக்சர் பினிஷிங்

சிக்சர் பினிஷிங்

முன்னதாக தோனி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 56 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 3 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, தோனி பாணியில் சிக்சர் அடித்து ரிஷப் பன்ட் ஆட்டத்தை முடித்து வைத்தார் என்பது ஒரு ஸ்பெஷல்.

Story first published: Wednesday, August 7, 2019, 12:34 [IST]
Other articles published on Aug 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+